Show all

கீழடி தமிழர் நாகரிகம் குறித்த நூல்! ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நூல்பரிசு இன்றையத் தலைப்பாகியுள்ளது

இன்றைய தலைப்பாகியுள்ள செய்தி- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்களில் ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது என்பது குறித்ததாகும். 

02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில முழுநேர ஆளுநராக அண்மையில் மாற்றப்பட்டார். நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இன்று சனிக்கிழமை பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காலை 10 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி உறுதிமொழி அளித்து பதவியேற்றார்.

தொடர்ந்து, தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது, மற்றொன்று சென்னை வரலாறு தொடர்பானது. இந்த இரண்டு புத்தகங்களும் தமிழர் அடையாளத்திற்கான முதன்மைத்துவம் வாய்ந்த புத்தகங்களாக பார்க்கப்படுகிறது.

பேரறிமுகங்களைச் சந்திக்கும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களைப் பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தான் தமிழக ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு, கீழடி என்ற புத்தகத்தையும் சென்னை என்ற முத்தையாவால் திருத்தம் செய்யப்பட்ட புத்தகத்தையும் பரிசாக வழங்கி இருக்கிறார் முதலமைச்சர்.

இந்த இரண்டு புத்தகங்களும் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களாகும். யாருக்கு புத்தகங்கள் அளித்தாலும், அதில் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் முன்னே வந்து நிற்குமாறு உள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து முதலமைச்சர் பரிசளித்து வருவது கவனிக்கத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,010.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.