Show all

கடலூர் அரசு பெண்கள் பள்ளியில் ஆய்வு! ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்

ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடலூர் வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலங்குப்; பணிகள் துணை இயக்குநர் முனைவர் மீரா தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூர் வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலங்குப்; பணிகள் துணை இயக்குநர் முனைவர் மீரா தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வில் புதியம்கிழமை முதல் தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன்படி கடலூர்வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் புதியம்கிழமை முதல் ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்.

இதில் பணிக்கு வந்த ஒர்ஆசிரியைக்கு காய்ச்சல் இருந்தது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் பள்ளியில் தொற்றுக்கொல்லி தெளிக்கப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டது. கடலூர் நலங்குப் பணிகள் துணை இயக்குநர் மீரா தலைமையில் கடலூர் புதுப்பாளையம் அரசு தொடக்க நலங்கு நிலைய மருத்துவர்கள் ராஜகணபதி, கவிதா மற்றும் மருத்துவக்குழுவினர் நேற்று அப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியை இருந்த அறையில் யார், யார் இருந்தனர் என்று கேட்டறிந்தனர். தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியை வகுப்பறைக்கு சென்று பாடம் எடுத்தாரா என்றும் கேட்டறிந்தனர்.

பின்னர் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் வெப்ப நிலை அதிகரித்து காட்டவில்லை. மேலும் மருத்துவக்குழுவினர் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழையும் பார்வையிட்டனர்.

புதியம்கிழமை பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் நேற்றும் பள்ளிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.