Show all

இங்கேயும் அட்மின் பிரச்சனையா? வழக்கறிஞர் கோபு, சீமான் மீது அவதூறு பதிவு வெளியிட்டுவிட்டு, அவசர அவசரமாக நீக்கியிருக்கிறார்

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிடியிலிருந்து முதியவரின் சொத்து மீட்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் ஒருவரின் முகநூல் பதிவு, அறியாமையின் பாற்பட்டதா? திட்டமிட்;ட அவதூறா என்று கேள்வி எழுந்துள்ளது.  

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், சென்னை சாலிகிராமம் பகுதியில் 19 ஆண்டுக்காலமாக ஒரு முதியவரின் வீட்டில் வாடகை கொடுக்காமல் தங்கியிருந்தார் சீமான். இத்தனை ஆண்டுக்காலமாக 45,00,000-க்கும் மேல் வாடகை பாக்கி உள்ளது. பல அறங்கூற்றுமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல். ஒருவழியாக இன்று என்னால் அதற்குத் தீர்வு கிடைத்தது என நினைக்கும்போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். 

இத்தனைக்கும் அவர் உண்மையான வாடகைதாரர் அல்ல. உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டுச் சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குநராகத் தங்கி வாழ்க்கையை தொடங்கிய இடத்தைவிட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார். இன்று இதுவரை தான் செய்த தவற்றை உணர்ந்து, மனந்திருந்தி வீட்டின் சாவியை அறங்கூற்றுமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் என்று, நாம் தமிழர் கட்சி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கியிருந்தார் வழக்கறிஞர் கோபு. ஆனால், அந்தப் பதிவை சில மணி நேரத்திலேயே நீக்கியும் விட்டார். 

இந்தக் குற்றச்சாட்டு குறித்த ஆய்வில், 15 ஆண்டுகளுக்கு முன்பு சீமான் குடியிருந்த வீடுதான் அது. ரவிச்சந்திரன் என்பவர்தான் 19 ஆண்டுகளுக்கு முன்னாடி அந்த வீட்டில் இருந்தார். அவர் பெயரில்தான் ஒப்பந்தம் இருக்கிறது. 

15 ஆண்டுகளுக்கு முன்னாடியே அந்த வீட்டிலிருந்து சீமான் வெளியேறிவிட்டார். அதன் பிறகு மூன்று வீடுகள் மாறிவிட்டார். ரவிச்சந்திரன்கூட தங்கியிருந்ததால் சீமான் பெயரையும் இந்த வழக்கில் இணைத்துள்ளார்கள். வழக்கு குறித்த ஆவணங்களைகூட அந்தப் பழைய முகவரிக்கே அனுப்பியுள்ளனர். இதனால் வழக்கு குறித்து சீமான் தரப்புக்கு தெரிய வாய்ப்பில்லமல் போய்விட்டது. சீமான் வீட்டுச் சாவியை ஒப்படைத்தார் என்கிற அந்தப் பதிவில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. 

வழக்கறிஞர் கோபு அவசர கோலத்தில் இந்தப் பதிவை வெளியிட்டு விட்டு, அவசர அவசரமாக நீக்கியிருக்கிறார் என்று தெரிகிறது. இங்கேயும் அட்மின் பிரச்சனையா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.