Show all

வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது! தமிழ்நாட்டு மக்களின் தரவரிசையில், தங்களுக்கான இடம் குறித்து கட்சியினர் ஆர்வம்

வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சியினருக்கும் சிறு குறு பதவிகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால், கட்சியினர் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக எதிர் நோக்குகின்றனர். 

26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன. 
 
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், அரசிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. 
 
முதல்கட்ட தேர்தலில் 74.37 விழுக்காட்டு வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 விழுக்;காடு வாக்குகள் பதிவாகியதாக தெரிவித்திருந்தது. 

இன்று காலை 8 மணிக்கு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது. 
 
அதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியே 40 மேசைகள் வரை போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 
 
வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் எனவும் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இந்த அடிப்படைகளில் பெரும்பாலான மையங்களில் வாக்கு எண்ணும் பணிக்கான தொடக்க வேலைகள் முன்னெக்கப் பட்டு வருகிறது.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,034.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.