Show all

பெயரின் முன்னெழுத்தை தமிழிலேயே குறிப்பிடவேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச்செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்களில் பொதுமக்களின் பெயர்களை குறிப்பிடும்போது முன்னெழுத்துக்கள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலேயே பதிவிட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், அரசு ஆவணங்களிலும் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் தமிழில் எழுதும் பழக்கத்தை மாணவர்களிடையே கொண்டு வரும் நோக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போதும், வருகை பதிவேடு, பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து சான்றிதழ் பெறும் போதும், கையெழுத்திடும் அனைத்து சூழ்நிலையிலும் தமிழில் கையொப்பம் இடும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று தலைமைச்செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்களில் பொதுமக்களின் பெயர்களை குறிப்பிடும்போது முன்னெழுத்துக்கள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலேயே பதிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,093.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.