Show all

நல்ல முன்னெடுப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நலங்குத்துறை கூறியுள்ளது. ஒரே நாளிலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிழமைதோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதுமே ஓமிக்ரான் குறுவி (வைரஸ்) அதிகரித்து வருவதால், இன்று முதல் தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் (15 முதல் 18 அகவை) தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் முதன்மையாகச் செலுத்தப்பட்டாலும் 15 முதல் 18 அகவைப் பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் 15-18 அகவைப் பிரிவினர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நலங்கு மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நலங்குத்துறை கூறியுள்ளது. ஒரே நாளிலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. 

சென்னையில் 4,601 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக அரசிப்பேட்டை மாவட்டத்தில் 1,886 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் போதிய இட வசதி ஏற்படுத்தித் தருமாறும் 15-18 அகவைப் பிரிவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, இது தொடர்பாக பெற்றோர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தும் போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தடுப்பூசி செலுத்த வரும் மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.