Show all

மேட்டூர் அணை நிரம்பியது!

மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிற காரணம் பற்றி காவிரி கரை மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நள்ளிரவு எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் 22,000 கன அடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது.

தொடர்ந்து நீர் வரத்து 20 ஆயிரத்தை தாண்டியபடி இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நள்ளிரவு 11 மணி அளவில் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது.

அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் மொத்தமும் காவிரி ஆற்றில் திறந்து திறந்து விடப்படுவதாக மேட்டூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதுசூதனன் வெள்ள அபாய எச்சரரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அதிகாலை முதல் காவிரி ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.