Show all

நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின்கட்டணம் இல்லா, மின் இணைப்பு

தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிக் கட்டில் ஏறியிருக்கும் ஸ்டாலின் அவர்களின் பெரு முனைப்பால்- தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில், நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின் இணைப்பு இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

04,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் வீடுகளுக்கு முதல் 100 அலகுகளுக்கு மின்கட்டணம் கட்டத் தேவையில்லை என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். 

அதுபோலவே வேளாண் பெருமக்களுக்கான மின்சாரம் முழுவதுமே கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். 
 
ஆனாலும் நீண்ட காலமாக புதிய வேளாண் இணைப்புகள் வழங்கப்படாமல் புதிய உழவர்களுக்கு இந்த இலவச மின்இணைப்பு வாய்ப்புகிடைப்பதில் தடங்கல் இருந்து வந்தது. அந்தத் தடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்கும் ஸ்டாலின் அவர்கள் முனைப்பால்- தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில், நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின் இணைப்பு இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

மின் இணைப்பு பெற்ற உழவர்களுடன், முதல்வர் ஸ்டாலின், இயங்கலையில் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி, சேலம், சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். மாநகராட்சி மன்றத்தலைவர்  ராமச்சந்திரன், துணை மன்றத்தலைவர் சாரதாதேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் உழவர்களுக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சேலம் மின்பகிர்மான வட்டத்தில், 1,248 மின் இணைப்பு, மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில், 2,714 என, சேலம் மாவட்டத்தில், 3,962 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர். சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கோபால
கிருஷ்ணன், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, இடைப்பாடி அரசு கலைக்கல்லூரி, தலைவாசல் பாரதியார் மகளிர் கலைக்கல்லூரியில், முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,221. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.