Show all

கோடநாடு கொலை கொள்ளை மறுவிசாரனைக்குத் தடைகோரிய மனு தள்ளுபடி! தடைகோரியவர் குற்றவாளியோ புகார்தாரரோ அல்ல; சாட்சி மட்டுமே

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான மறுவிசாரனைக்குத் தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடைகோரியவர் குற்றவாளியோ புகார்தாரரோ அல்ல சாட்சி மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கில் மேலதிக விசாரணை நடத்துவதற்கு காவல்துறைக்கு முழு அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலதிக விசாரணைசெய்ய எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் கோவையை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். அதில், கோடநாடு வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இப்போது போய் மீண்டும் விசாரணை நடத்துவது என்ன நியாயம். காவல்துறை மீண்டும் கூடுதலாக விசாரிக்க கூடாது. காவல்துறையினர் என்னை வாக்குமூலம் கொடுக்க அழைக்கிறார்கள். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். 

கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க, விரிவுபடுத்த காவல்துறைக்கு முழு அதிகாரம் இருப்பதாக சென்னை உயர் உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உயர் உயர்அறங்கூற்றுமன்றம், குற்றஆவணம் பதிகை செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம். தடை கோரி வழக்கு தொடர்ந்தவர் குற்றவாளியோ புகார்தாரரோ அல்ல; சாட்சி மட்டுமே. வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். வழக்கு விசாரணையை தாமதபடுத்தினாலும் உண்மையை கண்டறிவதில் உதவியாக இருக்கும். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற விசாரணையை தொடர எவ்வித தடையும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு காவல்துறை எந்த ஒரு வழக்கிலும் குற்றஅறிக்கை பதிகை செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என்ற தகவலை அறங்கூற்றுவர் குறிப்பிட்டுள்ளார். உயர் உயர்அறங்கூற்றுமன்றமே வழக்கில் மறுவிசாரணை நடத்த அனுமதி அளித்துவிட்டதால் இனி யாருக்கும் அழைப்பாணை அனுப்பி காவல்துறை மீண்டும் விசாரணையை தொடக்கத்தில் இருந்து நடத்த முடியும். 

முழுக் கமுக்கத்தை வெளிக்கொணரும் வரையில் விசாரணை நடத்தலாம். ஏற்கனவே சயான், மனோஜ், தனபால் ஆகியோரிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி, வாக்குமூலம் வாங்கிவிட்டனர். இவர்களிடம் வரும் நாட்களில் கூடுதல் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 

மறுவிசாரணையில் கோவை ரவி ஒத்துழைக்கவில்லை. தற்போது அவரின் மனு தள்ளுபடி ஆகியுள்ளதால் மேற்கொண்டு அவருக்கு காவல்துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடமும் வாக்குமூலம் வாங்கப்படும். 

இன்று உதகை அறங்கூற்றுமன்றத்தில் காவல்துறை புதிய வாக்குமூலத்தை பதிகை செய்யவில்லை. சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் ரவி தொடுத்த வழக்கு காரணமாக, கூடுதல் வாக்குமூலம் தொடர்பான விசாரணை உதகை அறங்கூற்றுமன்றத்தில் நடக்கவில்லை. எதிர்வரும் வியாழம் கிழமைதான் இந்த விசாரணை உதகை அறங்கூற்றுமன்றத்தில் மீண்டும் நடக்கும். 

அப்போது தமிழ்நாடு காவல்துறை எந்த தடையும் இன்றி புதிய வாக்குமூலங்களை சமர்ப்பிக்க முடியும். புதிய விவரங்களை பதிகை செய்ய முடியும். இப்போது வரை சயான், தனபால் கொடுத்த வாக்குமூலங்கள் என்ன என்று தெரியவில்லை. இன்று உதகை அறங்கூற்றுமன்றத்தில் விசாரணை நடக்காததால் அதன் விவரம் வெளியாகவில்லை. தற்போது சென்னை உயர் உயர்அறங்கூற்றுமன்றத்தின் அனுமதியால் சயான் கொடுத்த மறு வாக்குமூல விவரங்களை உதகை அறங்கூற்றுமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அப்போது பல கமுக்கங்கள்,  மர்மங்கள் வெளியே வரும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.