Show all

பெறுவது எப்படி? இன்று விளக்கம்! கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பம், ரூ.50ஆயிரம் நிதியுதவி பெற- நேற்று அரசாணை

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு நேற்று அரசாணை வெளியிட்டிருந்த தமிழ்நாடு அரசு- இன்று அதை இயங்கலையில் எளிமையாக பெறுவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. 

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

அந்த வகைக்கு- கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பம், ரூ.50 ஆயிரம் நிதி உதவியை எப்படி பெறுவது? என்பது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் பதிகை செய்யப்பட்ட உறுதிமொழி ஆவணத்தில், கொரோனா குறுவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு பரிந்துரை செய்வதாக அந்த நிவராணப்பாட்டில் இருந்து ஒன்றிய பாஜக அரசு மெல்ல கழண்டு கொண்டது. 

சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில், தமிழ்நாடு அரசு இதுபோன்ற இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், அப்போது- உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று, தமிழ்நாடு அரசு, சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வழங்குவது தொடர்பாக, நேற்று, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அதில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிதியுதவி பெறும் வழி முறை குறித்து இன்று அரசு விளக்கம் அளித்துள்ளது. 
தமிழ்நாடு அரசின் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மரபுரிமையர்களுக்கு ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் மரபுரிமையர், அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் Ex-Gratia for Covid-19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, இயங்கலை மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்று, அரசு தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.