Show all

ஊரடங்கு நீட்டிப்பில், 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை! முதல்வர் உத்தரவு

ஊரடங்கு நீட்டிப்பால்- தமிழ்நாட்டின் முதன்மையான திருவிழாவான பொங்கல் கொண்டாட்டம் வரவுள்ள நிலையில், பொங்கலுக்கு பிறகே 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளது 26,மார்கழி (ஜனவரி 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது திரிபடைந்த கொரோனா குறுவி (வைரஸ்) வேகமாக பரவி வரும் நிலையில், இன்றுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளது 26,மார்கழி (ஜனவரி 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மழலையர் பள்ளிகள் செயல்படவும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகள் விடுமுறையில்தாம் உள்ளன. நாளது 26,மார்கழி (ஜனவரி 10) வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை என்றால் அதற்கு நான்கு நாட்களில் தமிழ்நாட்டின் முதன்மையான திருவிழாவான பொங்கல் கொண்டாட்டம் வரவுள்ள நிலையில், பொங்கலுக்கு பிறகே 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.