Show all

சனிக்கிழமைகளில் கொரோன தடுப்பூசி முகாம்கள் செயல்படும்! ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமைக்ரான், இரட்டிப்பாகி அதிகரித்து வரும் கொரொனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். 

கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று  மீண்டும்  ஆலோசானை நடத்தினார். 

சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற  இந்த ஆலோசனை கூட்டத்தில் நலங்குத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நலங்குத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.இராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து  கொண்டனர். 

இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கொரோன தடுப்பூசி முகாம்கள் செய்ல்படும் என்று தெரிவித்துள்ளார்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,119.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.