Show all

கடல் முழுக்கியது! சுற்றுலா பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தனுசுக்கோடி அரிச்சல்முனையின் பெரும்பகுதியை

சுற்றுலா பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கியுள்ளது கடல்

01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரை. அரிச்சல் முனைவரையிலும் சாலை அமைக்கப்பட்ட பின்னர் தனுசுக்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தனுசுக்கோடி அரிச்சல்முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூர பரப்பளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி அகலமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் சாலை வளைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு மிக நீண்ட தூரம் வரையிலும் கடற்கரை மணல் பரப்பில் நடந்து சென்றும், ஓடி விளையாடி மகிழ்ந்தும் கடலின் அழகை பார்த்து மகிழ்ந்தனர். 

இவ்வாறு மணல் பரப்பாக காணப்பட்ட தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரையை கிட்டத்தட்ட கடல் விழுங்கிவிட்டது. இதனால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது.

தனுசுக்கோடி அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றி கடல் நீர் குறைந்து, மணல் பரப்பு மீண்டும் உருவாகுமா? என்பது ஐயமே. இருந்தாலும் நில அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு கடற்கரை மணல் பரப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,070.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.