Show all

வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை! வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் நடைமுறை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தொடர் நடைமுறையால், சர்ச்சை எழுந்துள்ளது.

31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடைமுறைப் படுத்தி வரும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 

இதன் காரணமாய், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் சுழியத்தில் தொடங்கி அண்மைக்காலங்களில் 30 விழுக்காடு வரை வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது, இந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் அறிய முடிகின்றது.

நடப்பு நிலவரமாக, தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது. 

நடப்பு ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 விழுக்காடுக்கு மேல், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதும், தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு அவர்கள் கைகாட்டி விட்டு, தமிழ் பணியாளர்களின் தலையில் பேரளவான பணியை சுமத்தி விட்டு, சொகுசாக சம்பளம் வாங்குவது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியை கற்றுக்கொள்ள 3 மாத காலக்கெடு அளிக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களைத் தகுதிநீக்கம் செய்யாமல், கூடுதலாக மேலும் மேலும் 3 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டுவருவதான அவலம் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,248.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.