Show all

இப்படியொரு மரபு! சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் அனைத்துக் கதவுகளும் 24 மணிநேர மூடல்

சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் அனைத்துக் கதவுகளும் இன்று இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் 150 ஆண்டு பழைமைக்கு உரியது. அன்றாடம் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சென்னை உயர்அறங்கூற்றுமன்ற வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக அடைக்கப்படுவது வழக்கம்.

உயர்அறங்கூற்றுமன்றம் என்பது பொதுமக்களுக்கான பொது இடம் அல்ல. அரசு சொத்து என்பதை நினைவூட்டி, உறுதிசெய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருநாள் கதவுகள் அனைத்தும் மூடப்படுகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த நடைமுறை இந்த ஆண்டில் நேற்று இரவு 8 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் உயர்அறங்கூற்றுமன்றத்தின் அனைத்துக் கதவுகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.