Show all

ஒத்துழைத்த பைக் நிறுவனத்தையும் பாராட்டியாக வேண்டும்! ரூபாய் 2.60 இலட்சம் சில்லறையாகக் கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

சாதனை முயற்சியாக- ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து ரூ.2.60 லட்சத்திற்கு பைக் வாங்கிய வலையொளி கட்சிமடை இளைஞர் சேலத்து பூபதி.  
 
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலம், அம்மாபேட்டை காந்தி திடல் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் வலையொளி கட்சிமடை நடத்தி வருகிறார். இளம் அகவை முதலே மிக உயர்ந்த விலையில் இருசக்கர துள்ளுவண்டி (பைக்) வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். 

இந்த ஆசையில் எந்த சாதனையும் இல்லைதான். ஆனால் அதற்காக ரூபாய் நாணயங்களை சேமிக்கவும், கோயில் கோயிலாகச் சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு 2.60 இலட்சத்திற்கு சில்லறை நாணயங்கள் திரட்டியதும்தான் சாதனை.  

சேலத்தை சேர்ந்த வலையொளி கட்சிமடையாளர் பூபதி தான் சேமித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக எடுத்து சென்று ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள  பைக் வாங்கிய நிகழ்வ இணையத்தைக் கலக்கி வருகிறது.

இதனையடுத்து பூபதி தான் சேகரித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக கட்டி அம்மாபேட்டை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்துக்கு கொண்டு வந்தார். அங்கு நாணயங்களை குவியலாக தரையில் கொட்டி நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களைக் கொண்டு 10 மணி நேரம் ஒரு ரூபாய் நாணயத்தை எண்ணி ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றார்.

துள்ளுவண்டியை பெற்றுக்கொண்ட பூபதி, தனது இளம் அகவை ஆசை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியதற்கு உதவியாக இருந்த நண்பர்களுக்கு நன்றி கூறிக்கொண்டார். சேமிப்பின் முதன்மைத்துவத்தை மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,201. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.