Show all

மகளிர் தம் உதவிக்குழு கடன் களைவு! – கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன்களைக் களைகிறது தமிழ்நாடு அரசு

கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் தம் உதவிக்குழு கடன்களைக் களைவு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் தம் உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் களைவு செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு வரையில் நிலுவையில் உள்ள மகளிர் தம்உதவிக் குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை களையப் படுகிறது.

இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 விழுக்காடு வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,087.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.