Show all

புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் இனிய செய்தி! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி

புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 45-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 22,மார்கழி (சனவரி-6)  வியாழக்கிழமை  தொடங்கி 10,தை (சனவரி-23) ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 18 நாட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில் தமிழ், ஆங்கில புத்தகங்களை கொண்ட 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தக கண்காட்சியில் புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் புத்தகக் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.