Show all

நாற்பத்தைந்தாவது புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்!

45-வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் கிறித்துவ இளைஞர்கள் சங்கத் (ஒய்.எம்.சி.ஏ.) திடலில் இன்று தொடங்க இருக்கிறது.

04,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இன்று முதல் 22,மாசி (06.03.2022) வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு அரசின் அனுமதியைத் தொடர்ந்து சென்னை, நந்தனம் கிறித்துவ இளைஞர்கள் சங்கத் திடலில்இன்று புத்தக கண்காட்சி பேரளவாகத் தொடங்க இருக்கிறது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தப் புத்தக கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,161.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.