Show all

இன்று இராசராச சோழன் பிறந்த செக்கு நாள்மீன் விழா!

செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் ஒப்பனை செய்யப்பட்டு உள்ளது.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராசராச சோழனின் செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு பளீர் மின்னொளியில் தஞ்சை பெரியகோயில் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. 

மாமன்னர் இராசராச சோழனின் 1036-வது செக்கு நாள்மீன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் இராசராச சோழனின் பிறந்தநாள்- ஆண்டு தோறும் ஐப்பசி செக்கு நாள்மீன் நாளில் கொண்டாப்படும். அதேபோல் இந்தாண்டு 1036 வது செக்கு நாள்மீன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக மாமன்னன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார், அதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான பொழிவாட்டுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார். ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவானது கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு தொடர்ஆண்டுக் கணக்கை 5123 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் தமிழர் விழாக்கள் ஆண்டுதோறும் தை ஒன்று பொங்கல், ஆடி பதினெட்டு நீர்ப்பெருக்குவிழா என்று மாத நாட்களிலும், விளக்குத் திருவிழா கார்த்திகை மாதத்து ஆரல் நாள்மீனிலும், இராசராச சோழன் பிறந்த நாள் விழா ஐப்பசி மாதத்து செக்கு நாள்மீனிலும் கொண்டாடுவது வழக்கம். 

மாறாக, திங்கள் ஆண்டுக் கணக்கை கொண்டாடும் பார்பனியத் திருவிழாக்கள் திதியை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதில் இருந்து நீண்ட காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் விழாவொன்று யாருடையது என்கிற ஐயத்திற்கு இடமாகும் போது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கோகுல அஷ்டமி போன்று அந்த விழா திதியில் கொண்டாடப்பட்டால் அது பார்பனியத் திருவிழாவென்றும், மாத நாளிலோ நாள்மீனிலோ கொண்டாடப்பட்டால் அது தமிழர் திருவிழாவென்றும் எளிதாக அறிந்துகொள்ளலாம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,066.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.