Show all

புழல்ஏரி திறப்பு எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரானது செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மணலி, சடயங்குப்பம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.