Show all

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அதிரடி! குடியரசு நாள் ஒப்பனை ஊர்தி தமிழ்நாட்டில் காட்சிப்படுத்தப்படும்

டெல்லி குடியரசு நாள்விழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழ்நாட்டில் காட்சிப் படுத்தப்படும்  என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்து அதிரடி காட்டியுள்ளார்.  

06,தை,தமிழ்த்தொடராண்டு-5123: குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஒப்பனை ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படாத வரலாற்றுப்பிழையை முன்னெடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. 

தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வஉசி, அரசி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தலைமைஅமைச்சர் மோடிக்கு மடல் எழுதினார். தமிழ்நாட்டு ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த ஒன்றிய பாஜக அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை, வல்லுனர் குழுதான் முடிவு செய்தது எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்த நிலையில், டெல்லி குடியரசு நாள்விழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழ்நாட்டில் காட்சிப் படுத்தப்படும்  என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்து அதிரடி காட்டியுள்ளார்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.