Show all

16 பதக்கங்கள் வென்றது இந்தியா! பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில்

பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில், இந்தியா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதல் இடம் பெற்றது.

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில் இந்திய பெண்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும் இப்போட்டிகளில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், நம்யா கபூர், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய அணி முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 16:4 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தியது. இப்பிரிவில் பிரான்ஸ் அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

இந்தியா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.