Show all

துடுப்பாட்ட வரலாற்றில் ஒரு புதிய முயற்சி! வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

துடுப்பாட்டப் போட்டிகள் நடக்காத நிலையில், முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தலைவர் மைக்கேல் வாகன், வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணியை அமைத்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: துடுப்பாட்டப் போட்டிகள் நடக்காத நிலையில், முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தலைவர் மைக்கேல் வாகன், வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணியை அமைத்துள்ளார். அந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லையென்பதாகத் தெரியவருகிறது.

வழுக்கை வீரர்கள் அணி உலகிலேயே சிறந்த டெஸ்ட் அணி என பல வீரர்களை வைத்து தங்கள் அணியை அறிவித்து முடித்த நிலையில், வழுக்கை வீரர்கள் அணியை அறிவித்துள்ளார் மைக்கேல் வாகன். இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் வழுக்கைத் தலை கொண்ட துடுப்பாட்ட வீரர்களே. 

இந்த வழுக்கை அணியின் தொடக்க வீரர்கள் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். இருவருமே தங்கள் அணிகளுக்காக சிறப்பாக ஆடியவர்கள். கிப்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள் ஆடியவர். 

மூன்றாம் இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா இடம் பெற்றுள்ளார். இவர் வழுக்கைத் தலையுடன், நீண்ட தாடியுடன் காட்சி அளிப்பார். இவர் கடந்த ஆண்டுதான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்காம் வரிசையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், பயிற்சியாளருமான டேரன் லேஹ்மன் இடம் பெற்றுள்ளார். மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனாதன் ட்ராட் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரையன் கிளோஸ் ஆறாம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரையே தலைவராகவும் தேர்வு செய்துள்ளார் மைக்கேல் வாகன். 

பிரையன் கிளோஸ் 1949இல் இங்கிலாந்து அணிக்காக ஆடியவர். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடிய மிக இளம் வீரர் இவரே. இவரை பற்றி இப்போதுள்ள ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இவரை எப்படியோ ஞாபகம் வைத்து தன் அணியில் இடம் பெற செய்துள்ளார் வாகன். 

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட் கீப்பராக மாட் ப்ரியாரை தேர்வு செய்துள்ளார். இவரும் இங்கிலாந்து வீரரே. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் டோக் போலிங்கர் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோனை தேர்வு செய்துள்ளார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் ராணா நவேத் அல் {ஹசைனை தேர்வு செய்துள்ளார். 

11ஆம் இடத்தில் ஜாக் லீச் அல்லது கிறிஸ் மார்ட்டின் இருவரையும் அறிவித்துள்ளார் மைக்கேல் வாகன். இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. சிலர் வீரேந்தர் சேவாக்கை சேர்த்திருக்க வேண்டும் என கூறி வருந்தி உள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.