Show all

சாய்னா நேவாலுக்கு கொரோனா! போட்டியில் பங்கேற்க தாய்லாந்து சென்றுள்ள நிலையில்

சாய்னாநேவால் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தாய்லாந்தில் நடைபெற இருக்கும். சிறகுப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார். ஆனால்…

28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் முன்னணி சிறகுப்பந்து வீராங்கனையான சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்றியுள்ளது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றவர் சாய்னா நேவால்.

சாய்னாநேவால் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தாய்லாந்தில் நடைபெற இருக்கும். சிறகுப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார்.

இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட 3-வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாய்னா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக அவரை கொரோனா தாக்கி உள்ளது.

இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் சாய்னா குறைந்தபட்சம் 10 நாட்கள் தனிமையில் இருப்பார்.

இதேபோல் முன்னணி வீரர்களில் ஒருவரான பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.