Show all

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வாகை சூட நமது வாழ்த்துக்கள்! இந்தோனேசியாவில் இன்று நடைபெறும் உலக உலா இறுதிச்சுற்றில்

மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு பிவி சிந்து பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க நிலையில், இன்று, உலக உலா இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சி-யங் ஆகியோர் இன்று பலபரிட்சை நடத்தவுள்ளனர். 

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக உலா இறுதி சுற்று சிறகுப்பந்துப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேறினார். இறுதிப்போட்டியில்  தென்கொரிய வீராங்கனையான அன் சி -யங் உடன் சிந்து பலப்பரிட்சை நடத்தவுள்ளார்.

உலகச் சிறகுப்பந்து தரவரிசையில், முதல் எட்டு இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக உலா இறுதி சுற்று சிறகுப்பந்து போட்டி (றுழசடன வுழரச குiயெடள)  இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது.  உலக தரவரிசையில் ஏழாம் இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி. சிந்துவும் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இதன் லீக் தொடரில் பி.வி. சிந்து முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். கடைசி லீக் ஆட்டத்தில்  தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து   12-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். எனினும், 2 வெற்றி ஒரு தோல்வியுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் சிந்து பலபரிட்சை நடத்தினார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில்  21-15 15-21 21-19 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.  மற்றொரு அரையறுதி ஆட்டத்தில்,  தென் கொரியாவின் அன் சி யங்,  தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்கை  25-23 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இன்று இந்தோனேசியாவில் நடைபெறும் உலக உலா இறுதிச்சுற்று சிறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வாகை சூட நமது வாழ்த்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.