Show all

தங்கம், வெள்ளி உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர் இந்திய விளையாட்டு வீராங்கனைகள்! ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில்

ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நடப்பு சாம்பியன் பூஜா ராணி (75 கிலோ) பெற்றார். 

17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நடப்பு வாகையர் பூஜா ராணி (75 கிலோ) பெற்றார். துபாயில் ஞாயிறு அன்று, ஆறு முறை உலக வாகையரான எம்.சி மேரி கோம் (51 கிலோ) உட்பட இந்தியாவின் மற்ற மூன்று குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. 

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளவுள்ள பூஜா ராணி (75 கிலோ) உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவை முறையில் தோற்கடித்தார். 

மோவ்லோனோவாவை செயலிழக்கச் செய்த அற்புதத் திறனுக்காக பூஜாவுக்கு 10,000 டாலர் பரிசுத் தொகை கிடைத்தது. மோவ்லோனோவால் அவருக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 

எனினும், ஆறு முறை உலக வாகையர் பட்டம் பெற்றுள்ள மேரி கோம் (51 கிலோ), மற்றும் இந்த போட்டிகளில் தற்போது அறிமுகமான லால்பூட்சைஹி (64 கிலோ) மற்றும் அனுபமா (81 கிலோ) இரண்டாம் இடங்களைப் பெற்றனர். 

மிகவும் கடுமையாக ஆடி இறுதியில் மூவரும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர். இவர்கள் வெள்ளி பதக்கங்களுடன் தலா 5,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையைப் பெற்றனர். ஒலிம்பிக்கில் பங்குகொள்ளவிருக்கும் மேரி கோம் கஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பேவிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்றார். 

இந்தப் போட்டிகளில் மணிப்பூர் சூப்பர் ஸ்டார் மேரி கோம் பெற்றுள்ளது ஏழாவது பதக்கமாகும். ஆசிய போட்டிகளில் எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய பதிப்பில் அவர் தங்கம் பெற்றார். அதுதான் ஆசிய போட்டிகளில் அவரது முதல் பதக்கமாகும். நேற்று அவர் பெற்ற பதக்கத்துடன், ஆசிய போட்டிகளில் அவர் இதுவரை ஐந்து தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். 

லல்பூட்சைஹி 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்றார். எனினும், தனது சக போட்டியாளரான மிலானா சப்ரோனோவாவுக்கு அவர் ஒரு வலுவான போட்டியை அளித்தார். இந்தியாவின் அனுபவமுள்ள விலோ பாசுமதாரியின் எல்லைக்கடவு காலாவதியானதால், அவருக்கு மாற்றாக லல்பூட்சைஹி கடைசி நேரத்தில் குழுவில் சேர்ந்தார். 

இந்திய வீராங்கனை அனுபமா, முன்னாள் உலக வாகையரான) கஜகஸ்தானின் லாசாத் குங்கீபாயேவாவுக்கு எதிராக களம் இறங்கினார். கடைசி நிமிடம் வரை அவர் சிறப்பாக ஆடி சரியான போட்டியை கொடுத்தார். எனினும் இறுதியில் 3-2 என்ற கணக்கில் அவர் தோல்வியுற்றார். 

முன்னதாக, தன்னை விட 11 அகவை குறைந்த ஒரு போட்டியாளரை எதிர்கொண்ட 38 அகவை மேரி கோம் ஒரு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். தனது கூர்மையான எதிர் தாக்குதல்களின் பயனாக தொடக்கச் சுற்றை எளிதாக வென்றார். எனினும், இரண்டாவது சுற்றில் அவர் தோல்வியை எதிர்கொண்டார். மூன்றாவது சுற்றில் கடுமையான போட்டி இருந்த நிலையில், இறுதியில் அவர் தோல்வியுற்றார்.

திங்களன்று, ஆண்கள் இறுதிப் போட்டியில் அமித் பங்கல் (52 கிலோ), சிவா தாபா (64 கிலோ) மற்றும் சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். ஒலிம்பிக் மற்றும் உலக வாகையரான உஸ்பெகிஸ்தானின் சாகோபிடின் சோயிரோவுக்கு எதிராக பங்கல் போட்டியிடுவார். 

ஆசிய விளையாட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் பாதர்சுக் சின்சோரிக்கு எதிராக தாபா விளையாடுவார். தனது நான்காவது தங்கத்தை நோக்கி விளையாடவுள்ள கசக் ஜாம்பவான் வஸிலி லெவிட்டை சஞ்சீத் எதிர்கொள்வார்.

அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்குச் செல்லும் சிம்ராஞ்சித் கவுர் (60 கிலோ), விகாஸ் கிரிசன் (69 கிலோ), மற்றும் லோவ்லினா போர்கோகெய்ன் (69 கிலோ), மற்றும் ஜெய்ஸ்மைன் (57 கிலோ), சாக்சி சவுத்ரி (64 கிலோ), மோனிகா (48 கிலோ), சாவிட்டி (81 கிலோ) மற்றும் வருந்தர் சிங் (60 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

அவர்கள் அனைவருக்கும் வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்காக தலா 2,500 டாலர் பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.