Show all

மேத்யூ ஹெய்டன்- தோனிக்குப் பிறந்தநாள் வாழ்த்து! விஜய் உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு

பேரறிமுக துடுப்பாட்ட வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் மேத்யூ ஹெய்டன்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக துடுப்பாட்ட வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் மேத்யூ ஹெய்டன்.

இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் தோனி தனது பிறந்த நாளை நேன்று கொண்டாடினார். பேரறிமுகங்கள் மற்றும் கொண்டாடிகள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை தலைவராக அவர் வழிநடத்திய விதத்தால் கொண்டாடிகள் அவரை தல என்றே அழைக்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் துடுப்பாட்ட வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரருமான மேத்யூ ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி! பேரறிமுக நடிகர் விஜய் சந்திரசேகருடன் இருக்கும் இது என்னுடைய விருப்பமான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.