Show all

துடுப்பாட்ட வீரர் தினேசு கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்! தமிழர்தம் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் உலாவருகிறார்

'உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்' என தமிழ்முன்னோரின் மந்திர ஆற்றலில் உலாவந்து தான் வாகையில் தொடர்வதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அசத்தியுள்ளார், தினேசு கார்த்திக்

09,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்தம் மூன்றாவது முன்;னேற்றக்கலை மந்திரம் குறித்து நிறைய தகவல்களை அடிக்கடி நாம் வெளியிட்டு வருகிறோம். 

தமிழ்முன்னோர் கட்டமைத்த மந்திரக்கலை என்பது என்ன? அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதை திருவள்ளுவர், 
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் 
திண்ணி யராகப் பெறின் 
தனது குறிளில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அதை அப்படியே நாம் விட்டு விட்டு, அயல் சார்புகளில் மாற்று மொழிகளின் பின்னால்;, பூசாரிகளின் பின்னால், வேதாந்த குருக்களின் பின்னால் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம். 

ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தினேசு கார்த்திக்-  தனது மறுவருகை குறித்து, 'உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்' என தமிழ்முன்னோரின் மந்திர ஆற்றலில் உலாவந்து தான் வாகையில் தொடர்வதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அசத்தியுள்ளார்.

யாருடைய தயவு, பரிந்துரை, குறித்து அங்கலாய்க்காது தனது மனஆற்றலே தனது வெற்றி என்று தனது துணிச்சலை வெளிப்படுத்தியுள்;ளார். இது வருங்கால தமிழ்இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டல் என்று பாரட்டுகிறோம். வாழ்த்துக்கள் மட்டைப் பந்தாளர் தினேசு கார்த்திக் அவர்களே.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணியை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இரண்டு கிழமைகளில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கு 18 பேர் கொண்ட அணியை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

இந்தத் தொடரில் தலைவர் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தற்காலிகத் தலைவராக இந்த தொடரில் கேஎல் ராகுலும், துணைத் தலைவராக ரிசப்பண்டும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் தினேசு கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கில் விளையாடி வருகிறார் தினேசு கார்த்திக். இதுவரை 26 சோதனை, 32 டி20 மற்றும் 94 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த மூன்றாண்டுகளுக்கு முந்தை ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன் பிறகு அணியில் அவருக்கு இடம் தரப்படவில்லை.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் பருவத்தில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் தினேசு கார்த்திக், ஏறத்தாழ முன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுகிறார்.

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (தலைவர்), ரிசப் பந்த் (துணைத் தலைவர்), தினேசு கார்த்திக், ருதுராஜ் கெய்க்வாட், இசான் கிசன், தீபக் கூடா, சிரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வெங்கடேசு ஐயர், யுஜ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேசுவர் குமார், ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல், ஆவேசு கான், அர்ஷ்தீப் சிங், உம்ராக் மாலிக்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,257.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.