Show all

டிரா ஆனாது இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். 

அதன் பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 373 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் 164 ரன்களும், மேத்யூஸ் 111 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின், இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். 163 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.  இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 67 ரன்னும், வீராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலா 50 ரன்னும் குவித்தனர். 

அதைத்தொடர்ந்து 410 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய இலங்கை அணி ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனாது. இலங்கை அணியில் அதிகபட்சமாக  தனன்ஜெயா 119 ரன்களும் ரோஷன் டி சில்வா 74 ரன்களும் குவித்தனர். ஒரு வழியாக இலங்கை அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த வெற்றி மூலம் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகளும் தொடர்ந்து 9 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவும் இந்த சாதனையை சமன் செய்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.