Show all

கொட்டிக் கிடக்கும் தமிழர் விளையாட்டுகள்!

நமது தமிழ் முன்னோர் உருவாக்கிய விளையாட்டுகள் பலவாகக் கொட்டிக் கிடக்கின்றன. இன்றைக்கு அவற்றில் ஒன்றிரண்டு கூட நம்மால் விளையாடப்படாமல் அத்துனையும் மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாளை மலரப்போகும் 5123வது தமிழ் புத்தாண்டில் அவைகளை ஒவ்வொன்றாய் மீட்டெடுக்க உறுதியேற்போம்.
 
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: விளையாட்டு மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தி புத்துணர்ச்சியாக்கவும் விளையாட்டு துணை புரிகிறது. இன்று நமது நாட்டில் விளையாடப்படும் விளையாட்டில் துடுப்பாட்டம் தான் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. 

இதனால் மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் கூட, நமது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் துடுப்பாட்டம் பக்கமே திரும்பிவிடுகின்றனர். பலரும் துடுப்பாட்டக் களத்தை நோக்கி நகர்வதால், அதற்கான போட்டியும் அதிகமாகிவிட்டது.

சென்னைக்கடற்கரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் முன்னெடுத்த போராட்டத்தால் அண்மையில் நாம் சல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தோம். நம் தமிழ் மண் சார்ந்த விளையாட்டுகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள, நமது தமிழ் முன்னோர்கள் உருவாக்கிய பல விளையாட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்ப்போம்,

ஓணப்பந்து விளையாட்டு
கிட்டிப் புள்ளு
கிளித்தட்டு, தாச்சி
சடுகுடு அல்லது கபடி
எட்டுக்கோடு
வழுக்கு மரம் ஏறுதல்
கயிறு இழுத்தல்
உறியடி
பாரிவேட்டை
கிளி கோடு பாய்தல்
போர்த்தேங்காய்
பல்லாங்குழி
இரட்டை மாட்டுப் பந்தயம்
கண்ணாமூச்சி 
குழை எடு
பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து
அம்பெறிதல்
கோழிச்சண்டை
வண்டிச்சவாரி
சில்லிக்கோடு
இளவட்டக் கல்
கீச்சு மச்சுத் தம்பலம்
போளையடி
வெள்ளமடித்தல்
சிற்றில், வீடு கட்டி விளையாடுதல்
கயிறடித்தல்
கப்பல் விடுதல், தோணி விடுதல்
குலை குலையாய் முந்திரிக்காய்
தேர்கட்டி விளையாட்டு
உப்பு மூட்டை
எறி பந்து
தும்பி விளையாட்டு
தொப்ப விளையாட்டு
எல்லே எல்லே
ஆடு வீடு
ஊஞ்சல்
தணையடி அடி
புளியடி புளியடி
மரமேறல்
நீந்தல்
ஆறுதல் ஈருருளி ஓட்டம்
சாக்கு ஓட்டம்
புளிச்சல்
தலையணைச் சண்டை
கள்ளன் காவல்
பச்சைக் குதிரை
காற்றாடி
எலியும் பூனையும்
தட்டா மாலை
சில்லுக் கோடு
கொழுக்கட்டை
பட்டம்
பூசணிக்காய் 
ஓடிப் பிடித்தல் மற்றும் அடிச்சுப் பிடித்தல்
ஒளித்துப் பிடித்தல்
கண்கட்டிப் பிடித்தல் அல்லது கண் பொத்தி விளையாட்டு
கண்கட்டி ஓட்டம்
கயிறு பாய்தல்
சமநிலை பேணுதல்
கிடுகு பின்னுதல்
ஊசி நூல் கோர்த்தல்
மரம் ஏறுதல்
தேங்காய் துருவுதல்
தட்டாங்கல்
பாட்டி பேத்தி
அல்லி மல்லி தாமரை
வீடு கட்டல்
வளையல் விளையாட்டு
ஊஞ்சல்
சோளக்கதிர்
சிறுவீடு
குத்து விளையாட்டு
குண்டு விளையாட்டு
வண்டியுருட்டுதல்
பூச்சி விளையாட்டு
மரங்கொத்தி 
தாயக் கட்டை
சொக்கட்டான்
கொக்கான்
ஆடும் புலியும்
பாம்பும் ஏணியும்
பாண்டி
பம்பரம்
மூன்றுகல் ஆட்டம்
செப்புச்சாமான்
உப்புத் தூக்கல்
கூட்டாஞ்சோறாக்கல்
தத்தைக்கா
சங்கு சக்கரம்
பருப்புக்கட
ஒத்தையா, ரெட்டையா மற்றும் கைத் துடுப்பாட்டம்
கரகர வண்டி
ஒருகுடம் தண்ணி ஊத்தி
குலைகுலையா முந்திரிக்காய்
கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை
நொண்டி
சல்லிக்கட்டு
சிலம்பம்
புலிவேடம்
வாய்ப்புநிலை விளையாட்டுகள்
அறிவுத் திறன் விளையாட்டுகள்
மஞ்சள் நீர் தெளித்தல்

மேலே கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டுகளில் சில நமக்கு பரிச்சயம் ஆனதே. ஆனால், இதில் பல பெயர்களை நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். அந்த விளையாட்டுகள் குறித்து நமது பெரியவர்களைக் கேட்டு அறிந்து கொண்டு மீட்டெடுக்க முயல்வோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.