Show all

கிடைத்தது 20கோடி ரூபாய் பரிசுத்தொகை! 4வது முறையும் வாகையர் பட்டத்தை வென்றெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு

துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தப் பருவத்தில் வாகையர் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து நான்காவது முறையும் வாகையர் பட்டத்தை வென்றெடுத்துள்ளது. 

இந்தப் பருவத்தில் வாகையர் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 

நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் எனவும் சென்னை கொண்டாடிகளுக்கான விரைவில் சென்னை வருவோம் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். அதே நேரத்தில் கோப்பையை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள். நாங்கள் வீரர்களை மாற்றி அமைத்தோம். சில போட்டிகளின் வெற்றிக்கு பின் வெற்றியாளர்கள் கிடைத்தார்கள்.

எங்களின் பயிற்சிகள் சிறப்பாகவே இருந்துள்ளன. நாங்கள் எங்கு விளையாடினாலும் கொண்டாடிகள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் கொண்டாடிகள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு டோனி கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,038.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.