Show all

இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் சாம்பியன்

பார்முலா ஒன் பந்தயத்தின் 16-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரீ போட்டி ஆஸ்டினில்  நடந்தது. இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 50 நிமிடம் 52.703 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை தனதாக்கினார்.

ஜெர்மனி வீரரும், சக அணியை சேர்ந்தவருமான நிகோ ரோஸ்பெர்க் 2.850 வினாடிகள் பின்தங்கி 2-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ அணி) 3.381 வினாடிகள் தாமதமாக பந்தய தூரத்தை கடந்து 3-வது இடத்தையும் பெற்றனர்.

இன்னும் 3 சுற்றுகள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த சீசனில் 10 சுற்று பந்தயங்களில் முதலிடம் பிடித்தன் மூலம் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அவருக்கு அடுத்தபடியாக ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல்  2-வது இடத்தில் இருக்கிறார். ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை ஹாமில்டன் 6 பேருடன் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.