Show all

கொரோனா பாதிப்பில் பாகிஸ்தானில் பத்து துடுப்பாட்ட வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா

பாகிஸ்தானில் 10 வீரர்களுக்குக் கொரோhன பாதிப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து, அவர்கள் அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனைப் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.  வீரர்கள் புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரீஷ் ராப் ஆகிய மூன்று  வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் நேற்று தெரிவித்தது.

இவர்கள் மூன்று பேருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அவர்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்றும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், மீதமுள்ளோருக்கு நடந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.  இதுபற்றி பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியில், இம்ரான் கான், காசிப் பாட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் மொத்தம் 10 வீரர்களுக்கு பாதிப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து, அவர்கள் அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.