Show all

காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை, இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 இலக்குகள் இழப்பிற்கு 151 ஒட்டங்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் இலக்குகள் இழப்பின்றி 152 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 10 இலக்குகள் வேறுபாட்டில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் விளையாட்டு ஆர்வலர்கள் கொண்டாடி  வருகின்றனர். சமூகவலைதளத்தில் இந்திய பாகிஸ்தான் கொண்டாடிகள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை காஷ்மீரில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடினர். மருத்துவக்கல்லூரி விடுதியில் திரண்டிருந்த மாணவ மாணவிகள் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடினர். இந்தக் காணொளி சமூகவலைதளத்தில் தீயாகி வருகிறது. 

இந்நிலையில், இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடிய சிறிநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் செர்-இ-காஷ்மீர் மருத்துவப் பல்கலை கழக மாணவர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,048.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.