Show all

தடையாட்ட நடனத்திற்கு ஒலிம்பிக்கில் அங்கீகாரம்! தமிழ்நாட்டு ஹிப்ஆப் ஆதியின் இசை மாதிரியான சூழலில் தோன்றியது தடையாட்டம்

தடையாட்ட நடனத்திற்கு ஒலிம்பிக்கில் அங்கீகாரம். ஒலிம்பிக் போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக தடையாட்ட (பிரேக்டேன்சிங்) நடன போட்டிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தடை ஆட்டம் தமிழ்நாட்டு கிப் கொப் தமிழா (ஹிப்ஆப்) ஆதியின் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். தொடக்க காலத்தில் இளைய சமுதாயத்தினரின் உணர்வுகளில் கிளர்ச்சியூட்டி மனதைக் கவர பெரு நகரங்களில் நடையோரங்களில் திறன்மிக்க ஒலிபெருக்களினால் இசையெழுப்பி இத்தடையாட்டத்தை நிகழ்த்தினார்கள்.
 
பாரீஸ் நகரில் தமிழ்த்தொடராண்டு-5126 (ஆங்கிலம் 2024) ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தடையாட்ட நடனம் முதன்முறையாக ஒரு போட்டியாக சேர்க்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தன.  இதற்காக வீரர்கள் தயாரான நிலையில் கொரோனா தொற்றால் வரும் 07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123 க்கு (23.07.2021) ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என பன்னாட்டு ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பாக் கூறினார்.

இதற்கடுத்து, பாரீஸ் நகரில் தமிழ்த்தொடராண்டு-5126 (ஆங்கிலம் 2024) ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடிவாகி உள்ளது. அதில், முதல் முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய தடையாட்ட நடனம் ஒரு போட்டியாக சேர்க்கப்பட உள்ளது.

இதற்காக தடையாட்ட நடனத்தில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களில் 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்து கொள்வார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஸ்கேட்போர்டிங், விளையாட்டு கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய போட்டிகளும் முதன்முறையாக நடத்தப்படும். இதனை தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இந்த போட்டிகள் தொடரும் என பன்னாட்டு ஒலிம்பிக் குழு செயல் வாரியம் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.