Show all

கொண்டாடுவோம்- பாராட்டுவோம் சானியா மிர்சாவை! இதயம் கவர்ந்த வீராங்கனை விருது பேற்றுக்கும், மாநில கொரோனபணிக்குப், பரிசுத் தொகை பகிர்ந்த கொடைக்கும்

இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்தயக் கோப்பை துள்ளுப்பந்து (டென்னிஸ்) போட்டியில், பரிசுத் தொகையை பகிர்கின்றார் மாநில கொரோனா தடுப்பு பணிகளுக்காக தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு.

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்தயக் கோப்பை துள்ளுப்பந்து (டென்னிஸ்) போட்டியில், பரிசுத் தொகையை பகிர்கின்றார் மாநில கொரோனா தடுப்பு பணிகளுக்காக தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு.

ஆண்டுதோறும் இதயம் கவர்ந்தவர் (ஹார்ட் அவார்டு) விருது வழங்கப்பட்டு வருவது பந்தயக் கோப்பை துள்ளுப்பந்து பெண்களுக்கான விளையாட்டுப் போட்டியின் சிறப்பாகும்.

பந்தயக் கோப்பை துள்ளுப்பந்து போட்டியில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகளுக்கு இந்த ஆண்டுக்கான விருதுக்கு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 2 வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ‘ஆசிய-ஓசியானா’ மண்டலத்தில் இருந்து இந்திய மின்மினி வீராங்கனை சானியா மிர்சா, இந்தோனேஷியா வீராங்கனை பிரிஸ்கா நுக்ரோகோ ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன. 

இவர்களில் விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்க இயங்கலை மூலம் ஒரு கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 16,985 வாக்குகள் பதிவாகின. இதில் சானியா மிர்சா 10 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று இந்தப் பிரிவில் இருந்து, இதயம் கவர்ந்த வீராங்கனை விருதுக்கு தேர்வானார். 

இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சானியா மிர்சா பெறுகிறார். இது குறித்து 33 அகவை சானியா மிர்சா கூறுகையில், ‘இந்த விருதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலகம் முழுவதும் உள்ள தனது கொண்டாடிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். இதன் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையான ரூ.1.½ லட்சம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதயம் கவர்ந்த வீராங்கனையாக விருது பெற்ற சானியா மிர்சாவை இந்தியாவின் பெருமையாக நாம் கொண்டாடுவது நமது சிறப்பு. பரிசுத்தொகையை நடுவண் அரசிடம் வழங்கி நீர்த்துப் போகமல், மாநில கொரோனா நிதிக்குப் பங்களித்தது அவரின் கெத்து.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.