Show all

விக்ரம்!

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயகத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் குறித்து பல கலவையான திறனாய்வுகள் வெளியாகி வந்தாலும் பாராட்டே முன்னிலை பெற்றிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முதன்மையான துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் உச்சகட்டத்தில் சூர்யா இடம்பெறுவார் என்றும், இந்தக் காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால், படத்தின் மீதான கொண்டாடிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

இன்று அதிகாலையிலேயே திரையரங்குகளில் வெளியாகி, மற்ற படங்களை ஒப்பிடுகையில், விக்ரமில் கமல்காசனின் நடிப்பும், அவரது உடல்மொழியும், வெறித்தனமும் தனித்துவமாக இருப்பதாக கமல் கொண்டாடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது விக்ரம் திரைப்படம்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் விளம்பரக்காணொளி, பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் 'கைதி' படத்தை மற்றொரு முறை பார்த்துவிட்டு 'விக்ரம்' உலகுக்கு வாருங்கள் என இயக்குநர் லோகேஷ் ட்வீட் செய்திருந்தார். இதனால், விக்ரம் படம்' கைதியின் நீட்சியாக இருக்கலாம் என கொண்டாடிகள் எதிர்பார்த்தனர்.

கைதி, மாஸ்டர் படங்களை போலவே விக்ரம் படத்திலும், போதைப்பொருள் தான் படத்தின் மையமாக உள்ளது. படத்தின் உச்சகட்டத்தில் வரும் சண்டைக் காட்சி, நடிகர் சூர்யாவின் நுழைவு காட்சி படத்திரையில் மறைந்தாலும் மனத்திரையில் மறையாமல் நிற்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,268.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.