Show all

இன்று திரையரங்குகளில் வெளியாகி பாராட்டு பெற்று வருகிறது! குதிரைவால் திரைப்படம்

கலையரசன் கதைத்தலைவனாக நடித்துள்ள இப்படத்தில், அவருடன் கதைத்தலைவியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர்.

04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீலம் திரைத்தயாரிப்பாளர் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் யாழி திரைநிறுவனம் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம் 'குதிரைவால்'. 

கலையரசன் கதைத்தலைவனாக நடித்துள்ள இப்படத்தில், அவருடன் கதைத்தலைவியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.

உளவியல், ஆழ்மன கற்பனைகள் மற்றும் காலப்பயணம் குறித்த ஒரு இயல்அறிவு (சயின்ஸ்) புனைவுப்படமாகவும், வழக்கமான திரைப்படத்தில்pருந்து மாறுபட்டும் இந்தப் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்ல இந்திய திரைப்படத்தில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளை வரைகலை முறையில் உருவாக்கி உள்ளனர்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குதிரைவால் திரைப்படத்தை சிறப்புக் காட்சியாக திரைப் பேரறிமுகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில், இயக்குனர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் மணிகண்டன், ஜி.எம்.சுந்தர், மைம் கோபி, ரமேஷ் திலக், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தை பாராட்டி அவர்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,191. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.