Show all

அலப்பறை நடிகர் அஜய் தேவ்கான் மீது பாயும் வினாக்கணை! தமிழர்கள் எதுக்குங்க ஹிந்தி பேசனும்

தமிழர்கள் எதுக்குங்க ஹிந்தி பேசனும்? என்று, இன்று அந்த அலப்பறை நடிகர் அஜய் தேவ்கனுக்கு வினாகணை தொடுத்திருப்பவர் சோனு நிகாம்.
    
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவே தேசியம் இல்லை, அது ஒன்றியமே என்று அண்மைக்காலமாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து ஆதாரங்கள் அடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹிந்தியைத் தேசிய மொழி என்று அஜய் தேவ்கான் என்கிற ஹிந்தி நடிகர் முன்னெடுத்த அலப்பறையால், அடுக்கடுக்காய் வினாகணைகள் அந்த அலப்பறை நடிகரைத் துளைத்தெடுத்து வருகின்றன.

தமிழர்கள் எதுக்குங்க ஹிந்தி பேசனும்? என்று, இன்று அந்த அலப்பறை நடிகருக்கு வினாகணை தொடுத்திருப்பவர் சோனு நிகாம்!

இந்தியாவில், தனிமொழியாக அதிகம் பேசப்படும் மொழி ஹிந்தி என்றாலும், ஹிந்தி மொழி பேசாத மக்கள் மீது ஹிந்தியைத் திணிக்க முடியாது, அதையும் தாண்டி திணிப்பதற்கு தோதாக, ஹிந்தியை தேசிய மொழி என்று பொய்யுரைக்கவும் கூடாது. ஏனெனில் இந்திய அரசியலமைப்பில் ஹிந்தி தேசிய மொழி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ள பாடகர் சோனு நிகம், தமிழர்கள் எதற்காக ஹிந்தி பேச வேண்டுமென வினா எழுப்பியுள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ்க்கும் இடையே நடந்த சூடான கருத்துப் பரிமாற்றத்தில், ஹிந்தி தேசிய மொழி இல்லவேயில்லை என்ற தகவல் நிறுவப்பட்டது.

பல ஊடகங்களிலும் ஹிந்தி தேசியமொழி இல்லவேயில்லை என்கிற மறுதலிப்பு பேசுபொருளான அடிப்படையில், ஹிந்தி தேசிய மொழி அல்ல என்று சுதீப் சுட்டிக்காட்டிய நிலையில், தென்னிந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்கள் ஏன் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சு போடுகிற ஒரு வினாவை அஜய் தேவ்கன் எழுப்பினார்.

அஜய் தேவ்கன் பாஜகவின் ஊதுகுழலாகப் பேசுகிறார் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். ஹிந்தி தேசியமொழி இல்லவேயில்லை எனும் நிறுவதலில் திரைத்துறையைக் கடந்து, பல தென்னகத் தலைவர்கள் ஹிந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியும் பலனளிக்காது என்று எச்சரித்திருந்தனர்.

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம் என்று வலியுறுத்தினர். 

இந்நிலையில் தமிழர்கள் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? என வினா எழுப்பியுள்ள பேரறிமுக ஹிந்தி பாடகர் சோனு நிகம், உலகின் பழமையான மொழி தமிழ்தான் மக்கள் சொல்கிறார்கள் எனவும் அவர் கூறினார். ஏற்கனவே பல உள்நாட்டு சிக்கல்களை சந்தித்து வரும் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார் நிகாம், 

மற்ற மற்ற மொழியினர் மீது ஹிந்தி மொழியைத் திணித்து நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சிப்பதா? அவர்கள் பேச விரும்பும் மொழியை பேச மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றார். இந்த நாட்டில் மக்களை மேலும் பிளவுபடுத்தும் முயற்சி எதுவும் வேண்டவே வேண்டாம் என்று எச்சரித்துள்ளார் சோனுநிகாம்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,239.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.