Show all

ஒரு பார்வை! விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான ஜகமே தந்திரம்


ஜகமே தந்திரம் படத்தின் சிவதாஸ் என்கிற பாத்திரம், கடைசியாக உதிர்க்கும்.. 'துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இந்த வரிதான் படத்தின் உண்மையான தலைப்பாக இருக்க முடியும்.

18,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தனுசின் ஜகமே தந்திரம் படம், கடந்த ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி தாமதமானது. திரையரங்க வெளியீட்டிற்கு திட்டமிடப்படுவதை தயாரிப்பாளர்கள் உறுதி செய்தனர். ஆனால், அது நடக்கவில்லை. இறுதியில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், படத்தின் விளம்பரக் காணொளி, நெட்பிக்ஸ் இந்தியாவின்  அதிகாரப்பாட்டு வலையொளி காட்சிமடை மூலம் வெளியிடப்பட்டது, இதனால் எண்ணிம மேடை மூலம் வெளியீடு என்பதாக உறுதி ஆனது. படத்தின் எண்ணிம உரிமைகள் 55 கோடிக்கு விற்கப்பட்டன இதனால் நேரடி எண்ணிம வெளியீட்டிற்காக அதிக சம்பளம் வாங்கும் தமிழ்த்; திரைப்படம் ஆனது. 

ஜகமே தந்திரம் படம்- மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போலந்து, போர்த்துகீசியம், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்டிலியன்), ஸ்பானிஷ் (நடுநிலை), தாய், இந்தோனேசியா மற்றும் வியட்நாமீஸ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோஸ், வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ், இசை சந்தோஷ் நாராயணன். 

சிங்களப் பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டு, இலங்கையை விட்டு வெளியேறி, இலண்டனில் அடைக்கலம் புகும் தமிழர்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு அகதி தகுதி பெற்றுத் தருவது, தொழில் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட நல்லது செய்யும் தலைமையராக வருகிறார் சிவதாஸ். அதற்கு நேர் எதிராக, அகதிகள் என்றாலே அருவறுப்பாக உணரும் இனவெறியனாக நிற்கும் பீட்டர் இன்னொரு தலைமையர். 

சிவதாசின் செயல்கள் அடைக்கலம் புகும் குடியேறிகள் நடுவே நல்ல செல்வாக்கு பெற்றுள்ளதாலும், அவரால் பலருக்கு நல்லது நடப்பதாலும், எரிச்சலடையும் வெள்ளைப் பேரினவாதி பீட்டர், சிவதாசைத் தீர்த்துக் கட்ட ஒரு ஆளை களம் இறக்குகிறார். அவர்தான் சுருளி என்ற பெயரில் தனுஷ். 

சுருளி, பீட்டரிடம் வாங்கிய பணத்துக்காக, நயவஞ்சகமாக சிவதாசை நம்ப வைத்து பீட்டருடன் ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்து, அந்தச் சந்திப்பில் சிவதாசை பீட்டர் கொல்ல மறைத்துக் கொண்டுவந்தக் கத்தியை கொடுத்து உதவுகிறார் சுருளி.

அப்போது சிவதாஸ் கடைசியாக உதிர்க்கும்.. 'துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இந்த வரிதான் படத்தின் உண்மையான தலைப்பாக இருக்க முடியும்.

அதற்குப் பிறகு நடக்கும் பல திருப்பங்கள் சுருளியை மாற்றுகின்றன. சுருளி செய்தது தனிப்பட்ட சிவதாசுக்கு செய்த துரோகம் அல்ல. பேரினவாதிகளால், ஏதிலிகள் ஆக்கப்படும் தமிழினத்திற்கே செய்த துரோகம் என்று இலண்டனில் சுருளி காதலித்த- ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஏதிலியும் பாடகியுமான ஐஸ்வர்யா லட்சுமியால் உணர்த்தி வைக்கப்படுகிறார். தான் செய்த துரோகத்திற்கு கைமாறாக பீட்டரின் பேரினவாத அடையாளத்தை முன்றாக அழித்து, அடையாளம் தெரியாத பகுதியில் அவரை நாடு கடத்தி நீயும் ஏதிலியாக வாழந்துபார் என்று விட்டுச் செல்வதில் படத்தின் கதை முடிகிறது. 

மலையாளத்தில் முதன்மை நடிகராக உருவெடுத்து கலக்கிக் கொண்டிருக்கும் ஜார்ஜ் இப்படத்தில் சிவதாஸாக வருகிறார். அலட்டிக் கொள்ளாத கதாபாத்திரம். ஆனால் சீக்கிரமே அவரது வேடத்திற்கு முடிவு கட்டியிருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. இன்னும் நிறைய நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் வந்த வரை அசத்தலாக செய்திருக்கிறார். சாகும்போது அவர் உதிர்க்கும். 'துரோகம் நம் இனத்தின் சாபம் என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 

ஈழப் போரின் காட்சிகளையும் சித்தரித்துள்ளனர். அவைகள் பெரிய ஆழமில்லை என்ற போதிலும், நெஞ்சை வருடுவதாக அந்த காட்சிகள் அமைந்துள்ளன. சிவதாஸ் கொலைக்குப் பிறகு படத்தில் சற்று ஆழம் குறைந்தது போல தெரிகிறது. ஆனால் சிவதாசுக்குப் பிறகு தனது காதலிக்காக வேட்டையைத் தொடங்குகிறான் சுருளி. அதேசமயம், சிவதாஸ் இடத்திலும் அவன் அமர்கிறான். இதில் ஆழம் அதிகமாக இல்லை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,057.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.