Show all

பிக்பாஸ் பருவம் ஐந்து! சிலரை, ஏறத்தாழ நூறு நாட்கள், தொலைக்காட்சியோடு நினைவுகளால் கட்டிப்போடப் போகிற நிகழ்ச்சி

சிலரை, ஏறத்தாழ நூறு நாட்கள், தொலைக்காட்சியோடு நினைவுகளால் கட்டிப்போடப் போகிற, கமல்காசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாம் பருவம், ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கியது.

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கமல்காசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாம் பருவம், ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு தொடங்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்வரும் பதினெட்டு பேர்கள் போட்டியாளர்களாக நூறு நாட்கள் விஜய் தொலைக்காட்சி ஆர்வலர்களுக்கு பொழுது போக்கு அளிக்க இருக்கின்றார்கள்.

பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக கானா பாடகராக இசை வாணி நுழைந்தார். 100 சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர். பெண் கானா பாடகர் என்பதாலேயே கச்சேரிக்கு 7 மணிக்கு போனால் 10 மணிக்கு பாட சொல்லுவாங்க என்று பகிர்ந்துக்கொண்டார்.

இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவர் ராஜு ஜெயமோகன். இவர் விஜய் தொலைக்காட்சியின் பல தொடர்களில் நடித்துள்ளார். ராஜு பலகுரல் கலைஞராக அறிமுகமாகி, சின்னத்திரையில் நடிகராகி, தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக நுழைந்துள்ளார். 

மூன்றாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளவர், செர்மனியை சேர்ந்த மதுமிதா. தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும்  தோற்றக் கலைஞராகவும் இயங்குகிறார். கலைத் துறையிலும் தற்போது கால் பதித்திருப்பதாகக் கூறினார்.

நான்காவது போட்டியாளராக தொகுப்பாளர் மற்றும் வலையொளி காட்சிமடையாளரான அபிசேக் ராஜா சென்றுள்ளார். 

ஐந்தாவது போட்டியாளராக திருநங்கையான நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அழகி சென்னையிலிருந்து அழகி உலகமாக 5 ஆண்டுகள் ஆகியிருக்கு என நமிதா மாரிமுத்து கமல்ஹாசினிடம் பகிர்ந்துக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டின் ஆறாவது போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளரான பிரியங்கா சென்றுள்ளார். எனக்கு விமானத்தில் பணிப்பெண் ஆக வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் கல்லூரியில் வணிக ஆளுமை இளவல் படிக்க போய், காட்சி ஊடகம் படிச்சேன். வீட்டுக்குள்ள நான் மற்றவங்களை தூக்கிவிடப் போறனா, இல்ல என்ன மற்றவங்க தூக்கிவிடப் போறங்களான்னு பார்ப்போம் என்று பகிர்ந்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7வது போட்டியாளராக கலந்தவர் அபிநய்;. நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் புதுவிதமான வேளாண்மை மற்றும் வேளாண்மை ஒத்துழைப்பு உள்ளிட்ட சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளில் இயங்குவதாக கமலிடம் பகிர்ந்துக்கொண்டார். அபிநய்க்கு கமல்ஹாசன் மாமன் முறை என்றும் கமல் கூறினார். அபிநயின் மனைவி மற்றும் மகள் காணொளி அழைப்பு மூலம் அபிநய்க்கு வாழ்த்து கூறினார்கள்.

பிக்பாஸ் வீட்டின் எட்டாவது போட்டியாளராக வந்தவர், சின்னத்திரை நடிகையான பாவனி. நான் 23அகவையில் திருமண வாழ்க்கையில் இணைய, எல்லாமே நல்லா போயிட்டு இருந்துச்சு, திடீரென எனது கணவன் தற்கொலை பண்ணிட்டாங்க. எனக்கு மண வாழ்க்கை நல்ல அமையல என்று வருத்தமாக பகிர்ந்துக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டின் 9வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு வீட்டிற்குள் நுழைந்தார். சந்திரமுகி படத்தில் நான் தோன்றிய பின்பு தான் மரியாதையே கிடைத்தது என்று பகிர்ந்துக்கொண்டார்.

மலேசியா தோற்றக் கலைஞரான நடியா சாங் பிக்பாஸ் வீட்டினுள் 10வது போட்டியாளராக செல்கிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. நான் 14வது அகவையிலிருந்து வேலைக்குச் செல்கிறேன். என்னுடைய சாய்மானமே எனது கணவர் தான் என்று பகிர்ந்துக்கொண்டார் நடியா சாங். 

பிக்பாஸ் வீட்டின் 11வது போட்டியாளராக நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளரான இமான் அண்ணாச்சி செல்கிறார். சிறிய அகiயில் இருந்தே நான் சிரமத்தில்தான். எனக்கு அன்றாடம் யாரையாவது சிரிக்க வைக்கணும் என்ற ஆசை இருந்தது. அப்படி சிரிக்க வைக்கும் போது தான் ஒருவர் என்னிடம், இங்க பண்றத சென்னையில போய் பண்ணு என்று கூற, நானும் சென்னை வந்து வாய்ப்பு தேடினேன். ஆனால் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

பனிரெண்டாவது போட்டியாளராக தோற்றக்கலைஞர் சுருதி பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். நான் ஒன்றிய அளவில் கூடைப்பந்து வீரர். விளையாட்டிற்கான உதவித் தொகையில் தான் படிச்சேன். யாராவது என்னால பண்ண முடியாது என்று சொன்னால், அதை கண்டிப்பா பண்ணனும்னு தோணும். எல்லாமே வாழ்க்கையில ஒரு பாடம் தான் என்று தனது கருத்தினை சுருதி பகிர்ந்துக்கொண்டார்.

சுருதியைத் தொடர்ந்து மற்றொரு தோற்றக் கலைஞரான அக்சராவை கமல்ஹாசன் வரவேற்றார். அதன் பின்பு இருவரிடமும் தோற்றக்கலையைப் பற்றி கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் என்று கேட்ட கமல்ஹாசன், அவர்களை நெளிவாக நடந்து காட்டும்படி கேட்டார். பின்பு இருவரும் ஒன்றாக சேர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர்.

14வது போட்டியாளராக வந்தவர் ஐக்கி பெர்ரி. மருத்துவம் படித்துவிட்டு ராப் இசையில் கலக்கும் ஐக்கி பெர்ரி என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் எனக்கூறி கமல்ஹாசனை ஐக்கி பெர்ரி ஆச்சரியப்படுத்தினார். வீட்டிற்குள் ஐக்கி பெர்ரி சென்றதும் நமிதா மாரிமுத்து சிரித்துக்கொண்டே வரவேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக தாமரை செல்வி செல்கிறார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு முத்து சிற்பி பாட, தாமரை செல்வி நடனமாடினார். நான் கிட்டத்திட்ட 22 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கேன். என்னுடைய குழந்தைகளோட என்னால் இருக்கவே முடியாது. காலையில 5 மணிக்கு போயிட்டு மறுநாள் 11 மணிக்கு தான் வருவேன் என்று கூத்து கலைஞர்களின் சிரமத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாணவனாக நடித்த சிபி பிக்பாஸ் வீட்டின் 16வது போட்டியாளராக வீட்டிற்குள் செல்கிறார். நான் நல்ல சம்பளம் வர வேலைய விட்டுட்டு திரைத்துறையில் நுழைந்தேன். மாஸ்டர் படம் இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னு எனக்கு தெரியல. ஒரு விடையத்தைச் செய்றத்துக்கு முன்னாடி பல தடவை யோசிப்பேன், ஆனால் செய்யத் தொடங்கிய பின்பு யோசிக்கமாட்டேன் என்று சிபி கூறினார்.

பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளராக நிரூப் வீட்டினில் செல்கிறார். நான் அடுத்தவங்களுக்காக எதாவது பண்ணனும்னு நினைச்சேன். பிக்பாஸ்னால என்னால மாற்றத்த கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் என்று நிருப் பகிர்ந்துக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டின் 18வது போட்டியாளராக வருண் வீட்டினில் செல்கிறார். வருண் நடிகர் மற்றும் தோற்றக் கலைஞராக அறியப்படுகின்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,027.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.