Show all

எப்படியிருக்கு! எண்ணிமத் தளத்தில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா

சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம். கால இயந்;திரக் கருதுகோளில், ஒரு நகைச்சுவைப் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் சந்தானத்தின், டிக்கிலோனா படம், ஜி5 எண்ணிமத் தளத்தில் வெள்ளிக் கிழமையன்று வெளியாகி இருக்கிறது. 

சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம். கால இயந்;திரக் கருதுகோளில், ஒரு நகைச்சுவைப் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு இணைகளாக அனகா மற்றும் சிரின் நடித்துள்ளனர். யோகி பாபு, ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விசால், மியா ஜார்ஜ், ஆர்யா, கருணாகரன் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படமும் தமிழில் கால இயந்திரம் கருதுகோளில் வெளியான நகைச்சுவை படம் தான். அந்த வரிசையில் அடுத்ததாக சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படமும் இணைந்துள்ளது. 

சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்திற்கு கலவையான திறனாய்வுகள் வந்தாலும் படம் எதிர்பார்த்த படி சிறந்த பொழுதுபோக்குப் படமாகவே அமைந்துள்ளது என்று பாராட்டு பெற்று வருகிறது. 

நடிகர் சந்தானம் தனது கீச்சுப்பக்கத்தில் மக்களை சிரிக்க வைக்க மட்டுமே இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஜி5 எண்ணிமத்தளத்தில் படத்தை பார்த்து கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார். 

இந்த படத்தில் உணர்ச்சிப்பாடான காட்சிகளிலும் சந்தானம் திறமைகாட்டி இருப்பதாக கொண்டாடிகள் கருத்தும் படங்களும் வெளியிட்டு பாராட்டி வருகின்றனர். 

நமது கருத்து என்னவென்றால், நீங்களாக முயன்று, எண்ணத்தை வலுப்படுத்தி தேவைக்கேற்ப செயல்பட்டு எதையும் சாதிக்கலாம்! ஆனால் அடுத்தவர் நம்மை இப்படியெல்லாம் முன்னேற்றிவிடுவார் என்று கருதினால், உங்களுக்குக் கிடைக்கிற அந்த முன்னேற்றம் கேவலப்பாட்டின் உச்சமாகவே அமையும். என்ற கருத்தை அனுபவமாகவே நமக்கு தெரிவிப்பதாக இருக்கிறது இந்தப்படம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.