Show all

சௌந்தர்யாவின் புதிய சமூகவலைதளச் செயலி! தமிழ் உள்ளிட்ட எட்டு இந்தியா மொழிகளில்

இந்தியாவின் முதல் சமூக வலைதள குரல் பதிவு செயலியான கூச்சலை, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யாவின் கூச்சல் (ஹூட்) என்கிற புதியவகை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் உங்களின் ஒரு நிமிட குரல் சேதியை பதிவு செய்யலாம் பகிரலாம். அத்துடன் ஒரு படத்தையும் இணைக்கலாம். 

இந்தியாவின் முதல் சமூக வலைதள குரல் பதிவு செயலியான இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 

நடிகர் இரஜினிகாந்த், தனது குரல் மூலமாக முதல் பதிவை கூச்சல் செயலியில் பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்தலாம்.

இந்திய மொழிகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்காளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் இந்த செயலியை இயக்கலாம். பன்னாட்டு மொழிகளில் தற்போதைக்கு சப்பானிய மொழியும் ஸ்பானிஷ் மொழியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

செல்பேசியை வாயருகில் வைத்து கொண்டு, இனி யாராவது ஒரு நிமிடம் ஏதாவது செய்தியை உரக்க பேசிக் கொண்டிருந்தால் ஓ!  கூச்சல் செயலியில் தன் குரல்சேதியை பதிவிடுகின்றார்களா என்று புரிந்து கொள்ளப்படுவார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,048.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.