மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை என்கிற நிலையில், 'மந்திரம்' என்பது மாயமல்ல மனஆற்றல் என்று தெளிவாக விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

27,தை,தமிழ்த்தொடராண்டு-5124: மனிதனில் அமைந்த மெய், வாய், மூக்கு, கண், செவி என்கிற ஐம்புலன்களால் அறியப்படுகிற உணர்வுகளைத்- தேக்கும் இடமாகவும், அதை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டாதாகவும் அமைந்த மனிதனின் ஆறாவது புலன் மனம் ஆகும்.

மந்திரம் குறித்து மேலும் விளக்குவதற்கு- மனம் மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன் என்கிற கட்டுரையைப் படித்துவிட்டு வருவது சிறப்பு ஆகும். 

மெய், வாய், மூக்கு, கண், செவி என்கிற ஐம்புலன்கள்- இறையின் அல்லது நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களின் விரிவே ஆகும். ஆறாவது புலன் ஆன மனம்- கடவுளின் அல்லது விசும்பின் விரிவு ஆகும்.

கடவுள் என்பது பேரறிவு ஆகும். தனிமனிதனின் அறிவு அதில் சிற்றறிவு ஆகும். அறிவு- இயக்கத்தில் தொடங்கி, எண்ணமாகி, மொழியாகி சிறந்து நிற்கிறது. இங்கே மொழி என்பது இயக்கமொழி, எண்ணமொழி, சொந்தமொழி என தலைப்பு பெறும். 

நடப்பில் இந்தமொழி- தாய்மொழி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. அடுத்த இனத்தின் மொழியைத் தெரிந்து கொள்வது ஒரு துறையாகும். துறைமொழியை பலதலைமுறைகள் தொடர்ந்து சொந்தமொழியாக்கிக் கொண்ட இனங்கள் உலகில் பலவாகும். 

இந்தியாவில் தமிழ் மட்டுமே- மூலமொழியாகத் தமிழையே கொண்ட மொழியாகும். நடப்பில் இந்தியாவில் இருக்கிற அனைத்து மொழிகளுக்கும் மூலமொழி ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறுமொழிகள் ஆகும். ஆக ஒரு துறைமொழி- கடவுள் மொழியாக மாற- பல தலைமுறைகள் தாண்டி பயணிக்க வேண்டும்.

மனிதனின், இறைத்தொடர்பு மொழியை- (மக்களோடு மக்கள் தொடர்பு கொள்ளும் மொழி) தாய்மொழி என்ற தலைப்பில் கொண்டாடி வருகிறது உலகம். கடவுள் தொடர்பு மொழியை- தேவமொழி, தேவபாஷா என்று தெரிவித்து, தங்கள் தங்கள் மொழியின் மத வழிகாட்டிளால்தான் அதை உருவாக்க முடியும் என்றும் அதற்கான ஸ்லோகங்களைக் கட்டமைத்து அதை ஓதி வருகின்றது உலகம்.

ஆக உலகினரின் மொழி- இறைத்;தொடர்பு மொழி மற்றும் கடவுள்தொடர்பு மொழி என்று இரண்டு ஆகும். இறைத்தொடர்பு மொழி மக்களுக்கானது ஆகும். கடவுள்தொடர்பு மொழி மதத்தின் வழிகாட்டிகளுக்கு மட்டுமானதாக உலகினரால் நிறுவப்பட்டுள்ளது. மதவழிகாட்டிகள் கடவுளிடம் பேசி நமக்குத் தேவையானதைப் பெற்று, நம்மை வரிசையில்; நிறுத்தி நமக்கு வழங்குகிற நடைமுறை உலகினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலகினரால்- மொழிக்கு இலக்கணம் கூட்டுச்சிந்தனையால் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் வாழ்க்கைக்கு வேறுவேறு தனிமனிதச் சான்றோரால் வேறுவேறு மதமாக, மதங்களின் வேதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்மக்களுக்கு மதமோ, மதங்கள் கொண்டாடும் வகையான வேதமோ இல்லவேயில்லை. மாறாக, தமிழ்முன்னோரின் கூட்டுச்சிந்னையில் காப்பியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பியம் (இலக்கணம்) மொழிக்கும் வாழ்க்கைக்கும் என இரண்டுக்கும் நிறுவப்பட்டுள்ளது. வாழ்க்;கைக்கான காப்பியம் (இலக்கணம்) பொருள் இலக்கணம் எனத் தலைப்பு கொண்டுள்ளது. இதற்கான முதலாவது மரபுதொகுப்புநூல் ஐந்திரம் ஆகும். நடைமுறையில் உள்ள மரபுதொகுப்புநூல் தொல்காப்பியம்.

ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கை இலக்கு நோக்கில், ஒவ்வொரு தனிமனிதரும் முன்னெடுக்கிற அனைத்து கருத்து மற்றும் கோட்பாடுகளும் இலக்கியம் என்று தமிழ் கொண்டாடுகிறது. கூட்டுச் சிந்தனையில் சமூக மரபில் இருக்கிற செய்திகளைத் தொகுப்பது காப்பியம் என்று தமிழ் கொண்டாடுகிறது.

தமிழ்மொழியிலும்- இறைத்;தொடர்பு மொழி மற்றும் கடவுள்தொடர்பு மொழி என்று இரண்டு ஆகும். நமது இறைத்தொடர்பு மொழி இலக்கியம் என்றும் காப்பியம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது என்பதை மேலே தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளோம். 

கடவுள்தொடர்பு மொழி- எண்ணம் மற்றும் மந்திரம் என்று தமிழ்முன்னோரால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் தொடர்பு மொழி- முழுக்க முழுக்க தனிமனிதருக்கானது என்கிறது தமிழ். கடவுளுக்கும் நமக்கும் இடையிலான தரகர்களோ, வழிகாட்டிகளோ தேவையில்லை என்கிறது தமிழ்.

எண்ணம்- தனிமனிதரில் தோன்றுகிற இலக்கு நோக்கிய அனைத்துமாகும். ஆனால் மந்திரம் என்பது கடவுளுக்கு நமது கேட்புகளை கொண்டு சேர்க்கிற மற்றும் கடவுளுக்குப் புரிய வைக்கிற நடவடிக்கையாகும். 

ஆறாவது புலன் ஆன மனம்- கடவுளின் அல்லது விசும்பின் விரிவு ஆகின்ற நிலையில், கடவுள் மொழி- தனி மனிதனின் மனதிற்கும் கடவுளுக்கும் மட்டுமான கமுக்கம் என்ற நிலையில் தனிமனிதனின் கடவுள் மொழிக்கு மனம் குவிக்கும் ஆற்றல் என்பதாக மந்திரம் என பெயர் சூட்டியுள்ளனர் தமிழ்முன்னோர். மந்திரம் என்பது மனஆற்றல். உலகினர் போலியாகக் கொண்டாடுவது போல மாயம் அல்ல.

கடவுள்தொடர்பு மொழி மதத்தின் வழிகாட்டிகளுக்கு மட்டுமானது என்றும், அவர்கள் கடவுளிடம் பேசி நமக்குத் தேவையானதைப் பெற்று, நம்மை வரிசையில்; நிறுத்தி நமக்கு வழங்கி வருகிற உலகினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடைமுறையை உண்மையன்று என்று நிறுவுகிறது தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக் கலையான இந்த மந்திரம்.

தனிமனிதனால் மட்டுமே கடவுளிடம் பேச முடியும். அது தனிமனிதன் தன்னுடைய தலையெழுத்தை தானே எழுதிக் கொள்கிற நடைமுறை, தனிமனிதன் மட்டுமே தனக்கான தலையெழுத்தை எழுதிக் கொள்ள முடியும். தனிமனிதர்கள் தங்களை ஒப்புக்கொடுக்கிற காரணம் பற்றியே வழிகாட்டிகள் நிற்க முடிகிறது என்பதை தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக் கலையான இந்த மந்திரம் தெளிவாக நிறுவுகிறது.

ஆக மந்திரம் என்பது- உங்கள் தேவைக்கு, காலவரையறை கடவுளுடையது என்றும் கமுக்கம் பேணவேண்டும் என்றும் உங்கள் தேவையை நிறைவேற்றித்தர கடவுள் உரிய வேலையைக் கேட்கும் என்பதான புரிதலோடு, உங்களின் எண்ணமொழியில், நேர்முறை சொற்களால், அழகியலோடு, உங்களால் உருவாக்கப்படும், கேட்பு ஆகும்.
இந்தக் கேட்பு- கடவுளில் மீண்டும் மீண்டும் பதிவாக- அன்றாடம் இரண்டு முறையாவது உங்களால் ஓதப்படவேண்டும்.
உங்கள் கடவுள்கேட்பு, நிறைவு செய்யப்பட்டவுடன், என் கேட்பை நிறைவு செய்து கொடுத்த விசும்பு தெய்வம் ஆகிய கடவுளுக்கு நன்றி என்று உங்கள் கேட்பை இரண்டு முறையாவது ஓதுவது வெற்றியைக் கடவுளோடு கொண்டாடுவது ஆகும். 
இனி உங்களின் அடுத்த தேவைக்கு மந்திரம் உருவாக்கும் வேலையைத் தொடங்கலாம். இப்படி உங்கள் வாழ்க்கை முழுவதும் மந்திரங்கள் இயற்றி கடவுளோடு ஒருங்கிணைப்பில் இருப்பது நீங்கள் நோற்கும் தவம் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,520.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.