Show all

உறுதியாக! கடவுளை உங்களின் அனைத்து முன்னேற்றத்திற்குமான துணையாக அமைத்துக் கொள்ள முடியும்.

ஐம்பொழுது:
1.கிழமை: ஞாயிற்றுக்கிழமை
2.நாள்: 08
3.மாதம்: பங்குனி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872656

 

1. பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு பத்தாம் வகுப்பு படிக்க வேண்டும். பத்து ஆண்டுகள் படிக்க வேண்டும். நீங்கள் படித்த படிப்பிற்கு ஒரு சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும். இந்தப் படிப்பை, சிலர் அரசு பள்ளிகளில் குறைந்த செலவிலும், சிலர் தனியார் பள்ளிகளில் மிகப் பேரளவாக பணம் செலுத்தியும் கட்டாயம் படிக்கிறோம்.
நீங்கள் படித்த இந்தப் படிப்பிற்கு என்று ஒரு முன்னேற்றம் உறுதியாக இருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க யாரும் உங்களோடு துணைக்கு வரமாட்டார்கள். 

2. மேல்நிலைக் கல்வியை முடிப்பதற்கு பனிரெண்டாம் வகுப்பு படிக்க வேண்டும். பனிரெண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். நீங்கள் படித்த படிப்பிற்கு இரண்டாவதாக ஒரு சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும். இந்தப் படிப்பை, சிலர் அரசு பள்ளிகளில் குறைந்த செலவிலும், சிலர் தனியார் பள்ளிகளில் மிகப் பேரளவாக பணம் செலுத்தியும் கட்டாயம் படிக்கிறோம்.
நீங்கள் படித்த படிப்பிற்கு என்று ஒரு முன்னேற்றம் உறுதியாக இருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க யாரும் உங்களோடு துணைக்கு வரமாட்டார்கள்.

3. பிஎ, பிஎஸ்ஸி, பிகாம் என்று இளநிலைப் பட்டப் படிப்பு முடிப்பதற்கு பனிரெண்டாம் வகுப்புடன் மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பு படிக்க வேண்டும். நீங்கள் படித்த படிப்பிற்கு இரண்டு சான்றிதழ்களுடன் ஒரு பட்டம் வழங்கப்படும். இந்தப் படிப்பை சிலர் அரசு பள்ளி, கல்லூரிகளில் குறைந்த செலவிலும், சிலர் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மிகப் பேரளவாக பணம் செலுத்தியும் கட்டாயம் படிக்கிறோம்.
நீங்கள் படித்த படிப்புகளுக்கு என்று ஒரு முன்னேற்றம் உறுதியாக இருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க யாரும் உங்களோடு துணைக்கு வரமாட்டார்கள்.

4. பிஇ என்று பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்பு முடிப்பதற்கு பனிரெண்டாம் வகுப்புடன் ஐந்து ஆண்டுகள் பட்டப் படிப்பு படிக்க வேண்டும். நீங்கள் படித்த படிப்பிற்கு இரண்டு சான்றிதழ்களுடன் ஒரு பொறிஞர் பட்டம் வழங்கப்படும். இந்தப் படிப்பை சிலர் அரசு பள்ளி, கல்லூரிகளில் குறைந்த செலவிலும், சிலர் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மிகப் பேரளவாக பணம் செலுத்தியும் கட்டாயம் படிக்கிறோம்.
நீங்கள் படித்த படிப்புகளுக்கு என்று ஒரு முன்னேற்றம் உறுதியாக இருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க யாரும் உங்களோடு துணைக்கு வரமாட்டார்கள்.

5. எம்பிபிஎஸ் என்று இளநிலைப் பட்டப் படிப்பு முடிப்பதற்கு பனிரெண்டாம் வகுப்புடன் ஐந்து ஆண்டுகள் பட்டப் படிப்பு படிக்க வேண்டும். நீங்கள் படித்த படிப்பிற்கு இரண்டு சான்றிதழ்களுடன் ஒரு மருத்துவர் பட்டம் வழங்கப்படும். இந்தப் படிப்பை சிலர் அரசு பள்ளி, கல்லூரிகளில் குறைந்த செலவிலும், சிலர் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மிகப் பேரளவாக பணம் செலுத்தியும் கட்டாயம் படிக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மருத்துவம் படித்துவிடக்கூடாது என்பதற்று நீட் என்கிற தடைத்தேர்வும் உண்டு.
நீங்கள் படித்த படிப்புகளுக்கு என்று ஒரு முன்னேற்றம் உறுதியாக இருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க யாரும் உங்களோடு துணைக்கு வரமாட்டார்கள்.

அ. தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்;;;;னேற்றக்கலையான மந்திரம் படிக்க ரூ410 செலவில் ஒரு நூல் போதும். அந்த நூலை முழுமையாகக் கற்றிட அறுபத்தியெட்டு கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொள்ள வேண்டும். 
நீங்கள் படிக்கிற மந்திரம் படிப்பு, நீங்கள் இதுவரை கற்ற அனைத்து படிப்புகளுக்கும் உறுதியான முன்னேற்றம் தந்திட கடவுளை உங்களுக்குத் துணையாகத் தருகிறது.
கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே என்கிற கட்டுரையையும், இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற கட்டுரையையும் புரிந்து கொண்டு கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள என்கிற கட்டுரை மூலம் கடவுளை உங்களின் அனைத்து முன்னேற்றத்திற்குமான துணையாக அமைத்துக் கொள்ள முடியும்.
ஆ. மந்திரம் நூல் அறிமுகம் கட்டுரை: 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.