Show all

தமிழ்மொழி போலவே, தமிழ்இனமும் தனித்துவமானதே

உலக அறிஞர்களால் தமிழ் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் போனது என்கிற செய்தி போலவே தமிழ் இனஅடிப்படை குறித்த ஆய்விலும் அதே இடர்பாடு தொக்கி நிற்பதை தெரிவிக்க வருவதே இந்தக் கட்டுரை.  

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கீழ்கண்ட இணைப்பில் உள்ள, நான் முன்பு வெளியிட்ட கட்டுரையின், தொடர்ச்சியே இந்தக் கட்டுரையும். இணைப்பு: http://www.news.mowval.in/Editorial/katturai/Tamil-215.html

உலக அறிஞர்களால் தமிழ் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் போனது என்கிற செய்தி போலவே தமிழ் இனஅடிப்படை குறித்த ஆய்விலும் அதே இடர்பாடு தொக்கி நிற்பதை தெரிவிக்க வருவதே இந்தக் கட்டுரை.  

வடஇந்தியர்கள் இன்று வரை இந்தியாவின் ஆதிக்க இனமாக ஆளுமை செய்து வருகிற காரணம் பற்றி, தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு என்கிற முழக்கமும் அதற்கான அடிப்படைச் செய்திகளும் அரங்கேற முடியாமல், உலகில் பெரும்பாலான இனங்களும் மொழிகளும் தனித்த அதிகாரம் பெற்றுவிட்ட நிலையில் தமிழும் தமிழ்இனமும் உரிய அதிகாரம் பெற்றுவிடாத நிலையில், உலக மொழிகளில் தமிழும் உலக இனங்களில் தமிழினமும் தனித்துவமானவைகள் என்று நிறுவ இயலாமல், உலகினர் கண்கள் திறக்கப்படாமல் தமிழை, தமிழரை உலகினர் யானையை தடவிப் பார்த்து வேறு வேறு முடிவுகள் தெரிவித்த கண்பார்வை மாற்றுத் திறனாளிகள் போல தொடர்ந்து குழம்பித் தவித்து, தமிழ் தமிழரை ஆய்வுகளில் இருந்து தவிர்த்தே வருகின்றனர்.

உலக அளவில் உருவ அமைப்பை வைத்து மனித இனங்களை வகைப் படுத்தப்பட்ட வரலாற்று தொடர்ச்சியை விளக்குவோம்.

மரபியல் ஆராய்ச்சிகள் தேடுதல்கள் வலுப்பெற்ற 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் மனித இனங்களின் உருவ அமைப்பை வைத்து சில பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். இந்தப் பிரிவுகளுக்குள்ளேயே உலகின் மொத்த மனித பிரிவுகளையும் உள்ளடக்கினர்.
வெள்ளை காகேசியன்,
மஞ்சள் நிற ஆசிய மங்கோலாய்ட்
நீக்ராய்டு கறுப்பு
ஆஸ்ட்ராலய்டு
முதலில் மூன்று பிரிவுகள் தான் இருந்தன. தென்னிந்தியாவில் பழங்குடிகளும் சாதியும் என்ற நூலை எழுதிய மரபியல் ஆராய்ச்சியாளர் எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியர்களை நீக்ராய்டு கறுப்பு என்ற மூன்றாவது இனத்தில் சேர்த்தார். ஆனால் தென்னிந்தியர்களுக்கு நீக்ரோ இன மக்களைப் போன்ற சுருட்டை முடியும் தடித்த உதடுகளும் இல்லை என்பதைத் தாமதமாகக் கண்டு கொண்டவர், ஆஸ்ட்ராலாய்டு என்ற புதிய பிரிவை நீக்ராய்டு பிரிவின் உட்பிரிவாக்கி அதில் தென்னிந்தியத்களைச் சேர்த்தார். பின்னர் ஆஸ்திரேலியப் பழங்குடிகளையும் இதில் இணைத்தார். 

உலக ஆய்வாளர்கள், தமிழை- தமிழ் என்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் திராவிடம் என்று, சமஸ்கிருத கலப்பில் தமிழில் இருந்து பிரிந்து போன தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் சுட்ட ஒரு பொதுதலைப்பை செயற்கையாக உருவாக்கிக் கொண்டதைப் போலவே 

தமிழ்இனத்தை- தமிழர் என்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் தென்னிந்தியர் என்று ஆய்வு செய்து உப்பில் இணைத்த சருக்கரையாக, தமிழரை அடையாளம் காணமல் திராவிடம், தென்னிந்தியா என்ற சருக்கரை கலந்த கலவையான உப்புக் கரைசலை ஒரு தனிப்பொருளாக அடையாளம் காண தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

1889 இல் ரெட்ரிச் வாசல் என்ற ஆய்வாளர் தென்னிந்தியர்கள் திபெத்திய மக்களின் உருவமைப்பைக் கொண்டுள்ளதால் அவர்கள் மங்கோலாய்டு பிரிவினர் என்றார்.

ஜோசப் கெனின் என்ற மரபியல் ஆராய்ச்சியாளர், இதையும் ஏற்க மறுத்தார். தென்னிந்தியர்கள் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் ஆகிய மூன்று பிரிவினரும் மற்ற உலக இனங்களை விட தனித்தன்மையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதால் அவர்களை நீக்ராய்டு பிரிவில் வேறு ஒரு உட்பிரிவு ஏற்படுத்தி இணைக்க வேண்டும் என்றார். அதை

சுருள் முடியுடைய நீக்ராய்டுகள்
சுருள் முடி இல்லாத நீக்ராய்டுகள்
என வகைப்படுத்தி அதில் தென்னிந்தியர்களை சேர்த்தாலும், தமிழினத்தை சேர்க்க முடியவில்லை.

டார்ல்டன் ஸ்டூன் என்ற ஆய்வாளர் தென்னிந்தியர்கள் காகேசியர்கள் என்ற பிரிவில்தான் அடக்கப்பட வேண்டும் என்றார்.

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஆதரித்ததற்காக ‘டார்வின் புல்டாக்’ என்று அழைக்கப்பட்ட தாமஸ் கக்சி 1976 இல் ஜந்தோக்ராய்டு என்ற புதிய பிரிவை உருவாக்கி உலக மக்களை நான்காக வகைப்படுத்தினார்.

ஜந்தோக்ராய்டு
வெள்ளை காகேசியன்,
மஞ்சள் நிற ஆசிய மங்கோலாய்ட்
நீக்ராய்டு கறுப்பு

ஜந்தோக்ராய்டு உட்பிரிவுகள் :
அதிக வெள்ளை நிறம் கொண்டவர்கள் அதிக கறுப்பு நிறம் கொண்டவர்கள் என்று பிரித்து இந்த கருப்பு வெள்ளை பிரிவுக்கு மெலனோ கிராய்க் என்று பெயரிட்டார்.

இவரது இறப்புக்குப் பின் இவரது ஆராய்ச்சிகளைத் தீவிரமாகத் தொடர்ந்த வில்லியம் ரிப்ளி, அதிக வெள்ளை நிறப் பிரிவினரை நார்டிக் பிரிவு என்றும் அதிக கருப்புநிறம் கொண்ட பிரிவினரை மத்தியதரைக்கடல் பிரிவு என்றும் வகைப்படுத்தினார்.

இந்த மத்தியதரைக்கடல் பிரிவில்தான் தென் இந்தியர்களோடு சேர்த்து இத்தாலியர்கள் ஸ்பானியர்கள், ஜெர்மானியர்கள், ஈரானியர்கள், லெபனான், இரான், கிரேக்கர்கள் தென்பகுதி ஸ்லாப் மக்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஜார்ஜியா மக்கள் எகிப்தியர்கள் அரேபியர்கள் ஆகியோர் வகைப்படுத்தப்பட்டனர்.

தற்போது இறுதியாக வில்லியம் ரிப்ளி அவர்களின் மரபியல் பிரிவு கோட்பாடுதான் உலகம் முழுவதும் பேசுபொருளாய் இருக்கிறது.

ஹெர்பெர்ட் ஹோப் ரிஸ்லி என்ற பிரித்தானிய இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேய மரபியல் ஆராய்ச்சியாளர், இந்திய இனங்களை பின்வருமாறு பிரித்தார்

துருக்கி இரானியர்
இந்தோ ஆரியர்
சைத்தோ திராவிடன்
ஆரிய திராவிடர்
மங்கோலிய திராவிடர்
மங்கோலாய்ட்
திராவிடர் 
நீக்ரிட்டோ
இதுவும் சற்று குழப்பான மரபணு வகைப்பாடு போல் தெரிந்தது.

இந்திய வரலாற்றில் புரட்சிகரமான ஒரு முடிவாக இத்தனை காலம் ஐரோப்பிய அமெரிக்கர்கள் மட்டுமே இந்திய இனங்களை ஆய்வு செய்துவந்த நிலையில் 2009 இல் இந்திய அரசு இந்தியர்களின் மரபணுவை ஆராய்ந்து வகைப்படுத்த திட்டமிட்டது.

ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அரசுக்கு சொந்தமான செல் மற்றும் மூலக்கூறு உயிரிஇயலுக்கான மையம் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக இந்தப் பெரும் ஆராய்ச்சியைத் தொடங்கியது. திராவிட ஆரிய சார்பு ஆய்வாளர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் இந்த மையத்தின் தலைவரான லால்ஜி சிங் மிக உறுதியாக இருந்தார். இவர்தான் ஆராய்ச்சியை தலைமையேறறார். 

அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, ஒரியா, ஹிந்தி என பல்வேறு மொழி பேசும் நடுநிலையான கொள்கை சார்பு இல்லாத ஆராய்ச்சியாளர்களை கவனமாக தேர்ந்தெடுத்து குழுவை உருவாக்கினார். தொழில்நுட்ப மற்றும் மரபியல் உதவிகளுக்காக இந்தவகை ஆராய்ச்சிகளில் புகழ்பெற்று விளங்கும் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களையும் இந்திய அரசின் அனுமதியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. அவைகள்
ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி
ஹார்வர்டு பொதுநலங்குப் பள்ளி
ஹார்வர்டு வாரிய நிறுவனம்
மாசுசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் 
இந்த வெளிநாட்டு குழுவில் கூட ராபர்ட் கால்டுவெல் மாக்ஸ்முல்லர் போன்ற திராவிட ஆரியச் சார்பு நிலைப்பாட்டில் உள்ளவர்கள் யாரும் இல்லாதபடி பின்புலம் ஆராயப்பட்டது.

அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி வழங்கியதும் ஆய்வைத் தொடங்கினார்கள். ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கம் முழுமையாக வெளிநாட்டு முடிவுகளை ஏற்காமல் தரமான வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்திய அரசே இந்திய இனங்களை வகைப்படுத்த வேண்டும் என்பதுதான்.

லால்ஜி சிங் தலைமையில் குமாரசாமி தங்கராஜ் என்ற தமிழரின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சி தொடங்கியது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தியாவில் இரண்டு தனித்தன்மை உடைய மரபணு வகைகள் கண்டறியப்பட்டன.
ஆதி தென்னிந்தியா
ஆதி வட இந்தியா 
இதில் ஆதி தென்னிந்திய மரபணு காலத்தால் முற்பட்டது என்ற முடிவு எட்டப்பட்டது. அனைத்து இந்திய குடிமக்களையும் இந்த இரண்டு பிரிவில் வகைப்படுத்தினர்.
ஆதி தென்னிந்திய மரபணுவில் ஆதி வட இந்திய மரபணு மூலக்கூறு குறைவாகவே இருந்தது.
அதேபோல் ஆதி வட இந்திய மரபணுவில் ஆதி தென்னிந்திய மரபணு மூலக்கூறு குறைவாக இருந்தது.

அவர்களின் ஆய்வின் முடிவின்படி ஆதி வட இந்திய கூறு ஆசியாவின் மேற்குப் பகுதியிலும் ஐரோப்பியாவில் பரவலான மக்களிடமும் காணப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் இயலும் கூட மரபணுக்கள் பெறப்பட்டது. அந்தமான் மக்கள் தென்னிந்திய மரபணுவோடு நெருங்கியிருந்தனர்

ஆனால் ஆதி தென்னிந்திய மரபணு மூலக்கூறு உலகில் எங்குமே காணப்படாமல் தனித்து நின்றது என ஆராய்ச்சி முடிவுகள் கூறின.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.