Show all

தனிமனித முன்னேற்றத்திற்கான மூன்று கலைகள்! தமிழில் இருக்கின்றன

தனிமனித முன்னேற்றத்திற்கான மூன்று கலைகள்! தமிழில் இருக்கின்றன. ஆனால் நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும் என்று அலசுகிறது இந்தக் கட்டுரை.

18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழர் வாழ்ந்து கண்டறிந்த அனுபவங்களைத் தொகுப்பது மிக அரிது. ஆனால் தொகுத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு உலக மனிதர்களில் எவ்வளவு உயரம் வேண்டுமானால் தமிழன் வளரமுடியும்.

தமிழனின் நெடிய தொடர்ச்சியின் அனுபவங்கள் அனைத்தும் தமிழில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழை நெடிய தொடர்ச்சி உடையது என்று காட்ட தமிழன் தமிழுக்கு முத்தமிழ் என்று பெயரிட்டிருக்கிறான்.

முதல்தமிழ் நாடகத்தமிழ். மொழிக்கு முந்தைய உடலசைவு மொழியை நாடகத்தமிழ் என்று தமிழ் பதிவு செய்து கொண்டிருக்கிறது. இன்றைய திரைப்படம், இணையத்தில் குறும்படம், தொடர்கள் வரை நாடகத்தமிழ்தான் மிக மிக நெடியது. தமிழர்கள் திரைப்படக் கலைஞர்களுக்கு முதன்மைத்துவம் தருகிற போக்கும் உள்ளீடாக கொண்டு போற்றிக் கொள்ளத் தக்கதே. நாடகக் கலை என்று தமிழர் அனுபவங்களைத் தொகுக்க முயன்றால் தமிழின் காலம் சில நூறாயிரம் (இலட்சம்) ஆண்டு  காலத்திற்கு முன்பு இருந்து தொடங்கும்;. 

அடுத்ததாக இசைத்தமிழ். தமிழன் பைய நாவை அசைத்து பைந்தமிழை இசையாக நீட்டி முழக்கிய காலம். தமிழன் முதலில் உருவாக்கிய மொழி இசைத்தமிழே. மூச்சை உள்ளிழுத்து வாஅஅஅஅஅ என்று அழைத்தமையும், மூச்சை வெளியேற்றி போஒஒஒஒஒஒ என்று பணித்தமையும் தமிழனின் தொடக்க நிலை கட்டளைஇசைச் சொற்கள். அம்மாவை மாஅஅஅஅ என்றும் அப்பாவை பாஅஅஅஅஅ என்றும் அழைத்தமை தமிழனின் தொடக்க நிலை உறவுஇசைகள். தமிழன் முதலில் பாடிய நெடும்பாட்டு தம் குழந்தையை உறங்க வைக்கப் பாடிய தாலாட்டு. தமிழ் இசைக்கலை என்று தமிழர் அனுபவங்களைத் தொகுக்க முயன்றால் தமிழின் காலம் சில பத்தாயிரம் ஆண்டு  காலத்திற்கு முன்பு இருந்து தொடங்கும்;. 

இறுதியானதுதான் இயற்றமிழ். அதில் எழுத்து சொல் என்று மொழிக்கான இலக்கணமும், பொருள்இலக்கணம் என்று வாழ்க்கைக்கான இலக்கணமும், இன்றைக்கு இருக்கிற கணினி இணையம் வரை அனைத்தும் அடங்கும். இதற்கு அடுத்து நான்காவது தமிழ் என்பதாக ஒரு தமிழை வடிவமைப்பதற்கான தேவை எதுவும் உருவாகவில்லை. இயற்றமிழ் என்ற தலைப்பில் தமிழர் அனுபவங்களைத் தொகுக்க முயன்றால் தமிழின் காலம் பல ஆயிரங்கள் ஆண்டு  காலத்திற்கு முன்பு இருந்து தொடங்கும்;. 

இந்த இயற்றமிழில், தமிழன் வானியலை ஒட்டி மூன்று முத்தான, உங்கள் எண்ணத்தை முன்னெடுத்து வாகைசூடிட, தனிமனித முன்னேற்றக் கலைகளை வடிவமைத்து தமிழில் பதிந்திருக்கிறான். அதில் தமிழர் வாழ்ந்து கண்டறிந்த அனுபவங்களைத் தொகுப்பது மிக அரிது. ஆனால் தொகுத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு உலக மனிதர்களில் எவ்வளவு உயரம் வேண்டுமானால் தமிழன் வளரமுடியும்.

அந்த முன்;;;;;;;;;;;னேற்றக்கலைகள் மூன்றில் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை. 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும். 3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும்.

இயல்பாக இருத்தல், அறிவூட்டத்தை முன்னெடுத்து அதன் வழி இயங்குதல் என்கிற இரண்டு நிலைகளில் ஒன்றில்தான் ஒவ்வொரு மனிதனும் இயங்கிக் கொண்டிருப்பான். குறிப்பாக இத்தனை நெடிய அனுபவம் உள்ள தமிழனுக்கு அறிவூட்டத்தை முன்னெடுத்து அதன் வழி இயங்குதலே இயல்பாக அமைந்திருக்கிறது. 

இன்றைய தமிழனின் தளர்ச்சிக்கு காரணம்: ஒவ்வொரு தமிழனும் அறிவூட்டத்தை முன்னெடுத்து அதன் வழி இயங்குதலே இயல்பாக கொண்டிருந்தாலும், பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், மதங்கள் என்று அயலவர்களே அனைத்து நிலைகளிலும் தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பதால், தமிழகத்தின் இயல்பு பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அயலாக இருக்கின்ற நிலையில்- இயலில் இறங்கி அடிமைத்தனத்தில் ஆழ்ந்தும், ஆறிவூட்டத்தில் அரைகுறையாக இறங்கி தோல்விகளையுமே தொடர்ந்து சந்தித்து வருகிறான் தமிழன். அதனாலேயே தமிழன் தமிழின் பெருமையையும் கொண்டாடுவான். ஆனால் தமிழால் முடியும் என்று தமிழ் வழிக்கல்விக்கு மழைக்குக் கூட ஒதுங்க மாட்டான். 

தமிழர் அமைத்து வைத்திருக்கிற இந்த மூன்று முன்னேற்றக் கலைகளில் முதலாவதான 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலையில் இயல்பாக இருத்தல் என்கிற நிலையில் இயங்குகிறவர்களால் மட்டுந்தாம், இதில் பயன்பெற முடியும். அது ஏன் அப்படி என்கிற செய்திகளை வேறு கட்டுரைகளில் பார்ப்போம். 

ஆறிவூட்டத்தோடு இயங்குகிறவர்களுக்கு 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை பெரிதாக பயன்தராது. தங்கள் அறிவூட்டத்தால் இயற்கையின் இயக்கப் போக்கில் குறுக்கிட்டு திசை திருப்புவார்கள். இவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு இரண்டாவது கலையான 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையை முன்னெடுக்கலாம். 

2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற இந்தக் கலைக்குப் பெயர்தான் அடிப்படை. இந்தக் கலைக்கு உங்கள் பெயரை தமிழில்தான் கட்டாயம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் நீங்கள் விரும்பும் இயல்பை முன்னெடுக்கிற வகைக்கு அந்த இயல்புக்குரிய எண்ணில் பெயரை அமைத்துக் கொள்ள வேண்டும். 

நான் இன்னும் கூடுதலாக அறிவூட்டத்தில் இயங்குகிறவன். எனக்கு உலகின் பல இனங்களின் தொன்மங்களைப் பொருத்திப் பார்க்க தெரியும். அவைகளை யெல்லாம் விட தனிமனித முன்னேற்றத்திற்கான செய்திகள் அதிகமாகவும், தெளிவாகவும், நேர்த்தியாகவும், சிறப்பாகவும் தமிழில் பதிந்த வைத்திருக்கப்பட்டிருக்கிறது என்று நிரூபித்தால் அந்த வகையை எனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறவர் என்றால், 

உண்மையை நடுநிலையில் நின்று தெளிகிற அறிவை என்னால் முன்னெடுக்க முடியும். எந்த அயலின் வாழ்மான நிர்பந்தமும் எனக்கு இல்லை. உண்மையிலேயே எனக்கு தனி மனித முன்னேற்றம் வேண்டும் என்று கருதினால் உங்கள் முன்னேற்றத்திற்குச் சிறப்பாக பயன்படுகிற கலை தமிழில் இருக்கிறது. அது மூன்றாவது தமிழர் கலையான  3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.