Show all

தமிழில்- ஹிந்தி, ஹிந்துத்துவா என்றே எழுதுங்கள்! இந்தி, இந்துத்துவா என்று எழுதாதீர்கள்; வரலாற்றுப் பிழை நேரும்.

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை ஆங்கிலம் என்று ஒலித்து பயன்படுத்துகிறோம். கால மாற்றத்திற்கு இப்படி பிறமொழிச் சொற்கள் நிறைய தமிழில் புழக்கத்தில் கொண்டு வரப் பட்டுவிட்டன.

அப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்ட சொற்களில் இரண்டு சொற்கள் மட்டும் தமிழ் ஒலிப்பிற்கு தக்க மாதிரி மாற்றி ஒலிப்பதால், மிக மிக ஆபத்தானவைகளாக, தமிழக வரலாற்று அடிப்படையையே சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு சொற்கள் ஒன்று ஹிந்தி, மன்றொன்று ஹிந்துத்துவா.

இந்த இரண்டு சொற்களை நாம் இந்தி என்றும், இந்துத்துவா என்றும் ஒலிப்பை தமிழ் மொழிக்குத் தக்கவாறு மாற்றி புழங்குகிறோம். இதனால் நமது மண்ணான இந்தியாவும் அவர்களுடைய மண்ணோ என்ற மயக்கத்தை உருவாக்குகிறது. 

எஸ்.வி.இராஜதுரை என்ற ஒரு தமிழ் ஆர்வலர் இந்தி, இந்து, இந்தியா என்று ஒரு நூலை எழுதி இந்தியாவும் அவர்களுக்குச் சொந்தம் போல கடுமையாக இந்தியாவையும் சேர்த்து சாடுகிறார். 

இன்னும் நிறைய தமிழ் உணர்வாளர்களுக்கு இந்தியா என்பது ஆரியர் மண் அல்ல் தமிழர் மண் என்று தெரியாமலே இருக்கிறது. 

நல்லவேளை ஆரியர்களுக்கு இந்தியா என்பது அவர்களுடைய சொல் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது என்பது தான் நமக்கான மகிழ்ச்சி!

ஆரியர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் இந்தியா என்ற சொல்லை ஒருபோதும் ஹிந்தியில் இந்தியா என்று எழுதவே மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி, தமது கட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் என்று ஹிந்தியில் எழுதுவது இல்லை. பாரதிய ராஷ்டிர காங்கிரஸ் என்றுதான் எழுதுகிறது.

பாஜக இன்னும் தெளிவாக தமது கட்சியை ஹிந்தியில் பாரதிய ஜனதா கட்சி என்று எழுதுவது போல தமிழிலும். ஆங்கிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி என்றே எழுதுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி பாரதிய ரிசர்வ் பைங் என்றுதான் ஹிந்தியில் எழுதப் படுகிறது. 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ஹிந்தியில் பாரதிய ஸ்டேட் பைங் என்றுதான் எழுதப் படுகிறது. ரூபாய் தாளில், ரூபாய் நாணயத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியில் பாரத் என்றும் தாம் எழுதப் படுகிறது.

ஏனென்றால் அவர்கள் கண்ணோட்டத்தில், ஆங்கிலேயர் ஆங்கில மொழியிலும், தமிழ் உள்ளிட்ட உலக மொழிகள் அனைத்திலும், இந்தியா- இந்தியா என்றே எழுதப் படுகிறது என்பதுதான்.

இந்தியாவில் தமிழ் தவிர இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இந்தியா என்பது பாரதம் என்றவாறுதாம் எழுதப் படுகிறது.  

சரி இந்தியா என்பது நமது மண், தமிழர்தம் மண் என்பதற்கான சான்றுகளை அடுக்குவோமா?

நமது மண்ணின் எல்லை குறித்து,  தென்குமரி வடபெருங்கல் குணக் குட கடலா எல்லை குன்று மலை காடு நாடு ஒன்றுபட்டு வழிமொழிய. (புறம் - 17) 

என்ற புறநாநூற்றுப்பாடலில், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழார் ஓர் நில எல்லையை அளிக்கிறார். 

தெற்கே குமரி, வடக்கே மாமலை. கிழக்கும் மேற்கும் கடல்கள் கொண்டது தங்கள் நாடு என. அந்த நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டவன் என அம்மன்னனை சொல்கிறார். சிலர் இந்த வட எல்லையின் மலை எந்த மலை என்ற வினாவை எழுப்பக்கூடும். அதற்கு இன்னும் தெளிவான விடை புறநாநூற்றின் ஆறாவது பாடலில் உள்ளது. 

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் - 6) என்பது அந்தப் பாடல்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது. இங்கே வடக்கே உள்ள மலை பனிபடர்ந்த பெரிய மலை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது. இப்பாடல்கள் தெளிவாகவே நமது தமிழர் தம் தேசத்தை நிலவியல் ரீதியாக வகுத்துவிடுகின்றன. அந்த நிலத்துமக்கள் தாங்கள் என்ற தன்னடையாளம் அக்காலத்தில் வலுவாகவே இருந்துள்ளது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். 

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம்.

உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து “நாவலந்தேயம்” என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா- ந்தியா என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். மேலே நாம் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கினோம்.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது-

ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால்,

அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவல-ந்தியா இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை. பிந்தைய வரலாறு நாம் அறிந்ததுதானே. 

நாவலந்தேயத்தை-ஆங்கிலத்தில் ந்தியா என்கிறோம் வடஇந்தியர்கள் பாரத் என்றே எழுதுகின்றார்கள் 

இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால், இந்தியாவை நாம் தமிழில் எழுதும் போது நாவலந்தேயம் என்று எழுத வேண்டும். 

அடுத்து, எந்தக் காரணம் கொண்டும் ஹிந்தி, ஹிந்துத்துவா க்களை ஹிந்தி, ஹிந்துத்துவா என்றே எழுத வேண்டும். இந்து, இந்துத்துவா என்று எழுதவே கூடாது. இந்தி, இந்துத்துவா, என்பவைகளின் சாயலிலேயே இந்தியாவும் அமைந்து விட்டதால், இந்தியா என்னும் சொல்லும் வடமொழி திரிபு போல எண்ணப் பட்டு வரலாற்றுப் பிழை நேர்ந்து விடும். 

இந்தியா என்ற சொல் நாவலந்தேயம் என்ற சொல்லின் திரிபே. ஹிந்தியும், ஹிந்துத்துவாவும் ஆரியர்களுக்குச் சொந்தமானவை. அவைகளை தமிழ்ப் படுத்தியே தீருவேன் என்று போய், தமிழர்தம் மண்ணான நாவலந்தேயமே இந்தியா என்கிற வரலாற்றைத் தொலைத்து விட வேண்டாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,225.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.