Show all

கணியக்கலை! கட்டுரை-4 எண்ணிக்கை வேறுபாடுதாம் ஒவ்வொன்றையும் வெவ்வேறாகக் காட்டுகிறது.

எண்ணிக்கை வேறுபாட்டால் ஒவ்வொன்றும் வெவ்வேறாகக் காணப்படுகிற நிலையில், அந்த வெவ்வேறு என்கிற இயல்புகளுக்கு அடிப்படை எண்ணிக்கையே ஆகும்.

அணுவில் 79 நேரும் (எலக்ட்ரான்;) 79 நிரையும் (புரட்டான்) இருந்தால் அது தங்கம் (கோல்டு). அணுவில் 82 நேரும் (எலக்ட்ரான்;) 82 நிரையும் (புரட்டான்) இருந்தால் அது ஈயம் (லெட்). இப்படி 103க்கு மேற்பட்ட தனிமங்களைப் பட்டியல் இட்டு வருகிறது ஐரோப்பிய விஞ்ஞானம். ஈயத்திலிருந்து மூன்று நேர்- நிரைகளை அகற்றி, எண்ணிக்கை மாற்றத்தால் தங்கமாக மாற்ற முடியும் என்பது சாத்தியமே என்கிறது ஐரோப்பய விஞ்ஞானம்.

அடிப்படை இயல்புகள் மூன்று; அவை-
வகைபாடு, பாகுபாடு, முரண்பாடு என்பன.
இந்த இயல்புகளை முறையே தாய், தந்தை, பிள்ளைகள் ஆகியோரிடம் காணலாம்.
கணியக் கலையில் தாய்-1 தந்தை-2 பிள்ளைகள்-3 என்று எண்களோடு பொருத்தலாம்.
முதலாமவளாக இருக்கிற தாயுக்கு எண் ஒன்றின் இயல்புகள் அமையப் பெறுகிறது.
தாயின் இயல்புகளை எண் ஒன்றின் மீதும் பொருத்திப் பார்க்கலாம்.
இரண்டாமவராக இருக்கிற தந்தைக்கு எண் இரண்டின் இயல்புகள் அமையப் பெறுகிறது.
தந்தையின் இயல்புகளை எண் இரண்டின் மீதும் பொருத்திப் பார்க்கலாம்.
மூன்றாவதாக இருக்கிற பிள்ளைகளுக்கு எண் மூன்றின் இயல்புகள் அமையப் பெறுகிறது.
பிள்ளைகளின் இயல்புகளை எண் மூன்றின் மீதும் பொருத்திப் பார்க்கலாம்.
அடுத்து வருவது பயணம்.
நான்காவதாக அமைகிற இயல்பு பயணம்.
பயணத்திற்கான இயல்பு எண்-4
பயணம் சார்ந்த துறைகள் அனைத்திற்குமான இயல்பு நான்கு.
அடுத்து வருவது கலை.
கலை பொதுவானது; கலைக்கான இயல்பு எண்-5 ஐந்து என்கிற எண் 1,2,3,4,5,6,7,8,9 என்கிற எண்களில் நடுவில் அமையப் பெற்ற வாய்ப்பால் அது நடுநிலையானது.
கலை- எண்ஐந்து இவற்றின் இயல்புகளை ஒன்றன் மீது ஒன்று பொருத்தி கொள்ளலாம்.
அடுத்து வருவது இலக்கியம்.
ஆறாவதாக அமைகிற இயல்பு இலக்கியம்.
இலக்கியத்திற்கான இயல்பு எண்-6
இலக்கியத்தின் இயல்பை ஆறின் மீதும் ஆறின் இயல்புகளை இலக்கியத்தின் மீதம் பொருத்திக் கொள்ளலாம்.
அடுத்து வருவது கமுக்கம். செல்வமும் இந்தத் தலைப்பிலேயே அமையும்.
கமுக்கத்தின் இயல்பு எண்-7
நமக்கு எளிதாகப் புரியாத எல்லாத் தலைப்புகளும் கமுக்கத்தின் இயல்பின.
ஏழு என்கிற தலைப்பில் வருகிற எல்லாவற்றையும் பொருத்தி ஆய்வு செய்யலாம்.
எட்டு என்றாலே சென்றடைவது. எட்டாவது இயல்பு புகழ்.
புகழுக்குரிய இயல்பு எண்-8
புகழுக்குரியவைகள் எல்லாம் இந்த இயல்பில் பொருந்தும்.
கடைசியாக போர். 
போர் ஒன்பதாவது இயல்பு.
போரின் இயல்பு எண்-9
பெருவெடி தாம் கடைசி. இது தமிழியல். பழந்தமிழர்தம் முடிவான முடிவு.
போருக்கான இயல்புகள் ஒன்பதுக்கும் ஒன்பதின் இயல்புகள் போரிலும் பொருந்தும்.
இந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு எண்ணுக்குமான இயல்புகளை நீங்களே பக்கம் பக்கமாக எழுத முடியுமல்லவா? தொடரும் கட்டுரைகளில் நானும் எழுதுகிறேன்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.